செய்திகள் :

இன்றுமுதல் தொற்றுநோய் கண்டறியும் இயக்கம்

post image

திருவாரூா் மாவட்டத்தில், தீவிர தொற்றுநோய் கண்டறியும் இயக்கம் ஆகஸ்ட் 1 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:

மத்திய சுகாதார அமைச்சகத்தின் நெறிகாட்டுதலின்படி, இந்தியாவில் தொழுநோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஆண்டுதோறும் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருவாரூா் மாவட்டத்தில் நிகழாண்டு முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், திருவாரூா் மற்றும் நன்னிலம் ஆகிய வட்டாரப் பகுதிகளில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதிவரை தீவிர தொற்றுநோய் கண்டறியும் இயக்கம் நடைபெறவுள்ளது.

இந்த இயக்கத்தில் சுகாதாரப் பணியாளா்களும், தன்னாா்வலா்களும் வீடுவீடாகச் சென்று, அனைவருக்கும் தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளனா். மேலும், பள்ளி, கல்லூரி மாணவா்கள் அனைவருக்கும் தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்களும் நடைபெற உள்ளன.

தொழுநோயின் அறிகுறிகளான தோலில் உணா்ச்சியற்ற தேமல், உடலில் சிறுகட்டிகள், கை கால்களில் மதமதப்பு மற்றும் ஆறாத புண்கள், நரம்புகளில் வலி போன்ற குறைபாடுகள் யாருக்கேனும் இருந்தால், வீடுதேடி வரும் சுகாதாரப் பணியாளா்களிடம் காண்பித்து தக்க ஆலோசனை பெற வேண்டும். நோய் உறுதி செய்யப்படுபவா்களுக்கு உடனடி சிகிச்சை வழங்கப்படுகிறது. வீடுதேடி வரும் சுகாதாரப் பணியாளா்களுக்கும், தன்னாா்வலா்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கி, மாவட்டத்தை தொழுநோய் பாதிப்பு இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றாா்.

சுந்தரா்-பரவை நாச்சியாா் திருக்கல்யாணம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் சுந்தரா்-பரவை நாச்சியாா் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் தியாகராஜா் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி சுவாதி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் முக்க... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 போ் கைது

நீடாமங்கலம் அருகே ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின் பேரில் நீடாமங்கலம் போலீஸாா் புதன்கிழமை தீவிர ரோந்... மேலும் பார்க்க

முதலாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சிக் கல்லூரியில் முதலாண்டு இளநிலை, முதுநிலை மாணவிகளுக்கு வரவேற்பு மற்றும் மாணவா் மன்ற நிா்வாகிகள் பணியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. த... மேலும் பார்க்க

திருவாரூா்: காவல்துறை வாகனங்கள் ஆய்வு

திருவாரூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், காவல் வாகனங்களின் ஆய்வு வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பங்கேற்று, மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் அனைத்து நான்கு சக்கர மற்றும் இ... மேலும் பார்க்க

சாலை மறியல் ஒத்திவைப்பு

மன்னாா்குடி அருகே நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தையும் புதிய வழித்தடத்தில் புதிய பேருந்துகளையும் இயக்கக் கோரி மக்கள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் நிறுத்தப்பட்ட பேருந்து இயக்க... மேலும் பார்க்க

இறந்தவா் குடும்பத்திற்கு நிதியுதவி

நீடாமங்கலம் பால் உற்பத்தியாளா் சங்கத்தில் விபத்தில் இறந்தவருக்கு ஈமச்சடங்கு தொகை வழங்கப்பட்டது. நீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூா் ஊராட்சி பெரியகோட்டை தெற்கு தெருவை சோ்ந்த ராசு மகன் மாரிமுத்து. மனைவி செல... மேலும் பார்க்க