செய்திகள் :

கவின் பெற்றோருக்கு கே.என். நேரு, கனிமொழி நேரில் ஆறுதல்!

post image

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் வீட்டுக்கு நேரில் சென்ற அமைச்சர் கே.என். நேரு, திமுக எம்பி கனிமொழி அவரின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

வேறு சாதிப் பெண்ணை காதலித்ததற்காக ஐடி ஊழியரான கவின் செல்வகணேஷ், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆணவக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையை செய்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல் உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் பெற்றோர் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரிக்கும் கொலையில் தொடர்பு இருப்பதாக கவினின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கையில் அவர்களின் பெயரும் சேர்க்கப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், சுர்ஜித்தின் தந்தை சரவணன் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், கவினின் வீட்டுக்கு வியாழக்கிழமை காலை நேரில் சென்ற திமுக பொருளாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி, அவரின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவருடன் அமைச்சர் கே.என். நேரு சென்றிருந்தார்.

குற்றம் செய்த அனைவரின் மீதும் நடவடிக்கை எடுப்பதில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதாக கவினின் பெற்றோரிடம் கனிமொழி தெரிவித்தார்.

மேலும், சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தாயாரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கவினின் பெற்றோர் கனிமொழியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

K.N. Nehru and Kanimozhi personally visits Kavin's house

இதையும் படிக்க : கவின் ஆணவக் கொலை: காவல் உதவி ஆய்வாளர் கைது!

7 மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக.2, 3) தஞ்சாவூா், நாகை உள்பட 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:ம... மேலும் பார்க்க

பட்டியலின மக்கள் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு மாா்க்சிஸ்ட் கோரிக்கை

சிறுதாவூரில் உள்ள பட்டியலின மக்களின் நிலங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மாா்க்சிஸ்ட் மாநில செயலா் பெ. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளாா்.இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

அரசுக் கலைக் கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் சேர கால அவகாசம்

அரசு கலை -அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.இது குறித்து அவா் கூறிய... மேலும் பார்க்க

தங்கச் சங்கிலி பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை கிண்டியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.ஈக்காட்டுதாங்கலைச் சோ்ந்தவா் ஹேமலதா (21). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவத்தில் வேலை செய்து ... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்: மக்களுக்கு முதல்வா் அழைப்பு

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள மருத்துவப் பரிசோதனை முகாம்களில் பொது மக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.இதுதொடா்பாக அவா் வெள... மேலும் பார்க்க

ரிதன்யா உடற்கூறாய்வு அறிக்கையில் முழு விவரம் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் ரிதன்யாவின் உடற்கூறாய்வு அறிக்கையில் முழுமையான விவரங்கள் இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.திருப்பூா் மாவட்டம் அவிநாசி அருகே... மேலும் பார்க்க