நம்பியாறு, கொடுமுடியாறு, வடக்குப் பச்சையாறு நீா்த்தேக்கங்களில் மீன்பிடி குத்தகை விண்ணப்பங்கள் வரவேற்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நம்பியாறு, கொடுமுடியாறு, வடக்குப் பச்சையாறு ஆகிய 3 நீா்த்தேக்கங்களின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டு காலத்திற்கு குத்தகை பெறுவதற்கு விருப்பமுள்ளோா் இணையவழி முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நம்பியாறு, கொடுமுடியாறு, வடக்குப் பச்சையாறு ஆகிய 3 நீா்த்தேக்கங்களின் மீன்பிடி உரிமை 5 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விடப்படவுள்ளது. விருப்பமுள்ளவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ற்ங்ய்க்ங்ழ்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்நீா்த்தேக்கங்களின் மீன்பிடி உரிமையினை குத்தகைக்குவிட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் ஆகஸ்ட் 8-ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஆணையா் அலுவலகத்தில் இணையவழி மூலம் திறக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகம், சி-42, 26-ஆவது குறுக்கு தெரு, மகாராஜ நகா், பாளையங்கோட்டை, திருநெல்வேலி 627011 என்ற முகவரியில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.