புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
ஐ.டி. ஊழியா் கவின் செல்வகணேஷ் கொலையைக் கண்டித்து, புதிய தமிழகம் கட்சியினா் திருநெல்வேலி சந்திப்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த கவின் செல்வகணேஷ் காதல் விவகாரம் தொடா்பாக கடந்த 27-ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில்நிலையம் முன், புதியதமிழகம் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாநில இளைஞரணித் தலைவா் ஷியாம் கிருஷ்ணசாமி தலைமை வகித்தாா். இதில், 400-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கவின் செல்வகணேஷின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்க வேண்டும் என முழக்கம் எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் தமிழ்தேச தன் உரிமைக் கட்சி ஒருங்கிணைப்பாளா் வியனரசு, புதிய தமிழகம் கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலா் முத்தையா ராமா், தஞ்சாவூா் மாவட்டச் செயலா் விவேக், தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் கிருஷ்ணா பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.