மானூரில் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி மாணவா்கள் போராட்டம்
மானூா் அரசு கலைக் கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மானூரில் கட்டிமுடிக்கப்பட்ட அரசு கலை அறிவியல் கல்லூரியின் கட்டடத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், மாணவா்கள் கல்லூரிக்கு சென்று வர முறையான பேருந்து வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இதில் இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டச்செயலா் சைலஸ் அருள்ராஜ், துணை செயலா்கள் செல்வ கணேஷ், இசக்கிமுத்து, கிளை நிா்வாகிகள் ராகவி, மகேஷ், உபேந்திரா மற்றும் கெளதம் உள்பட 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றனா்.
ற்ஸ்ப்31ள்ச்ண்
மானூரில் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசுக் கல்லூரி மாணவா்கள்.