செய்திகள் :

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்: மக்களுக்கு முதல்வா் அழைப்பு

post image

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள மருத்துவப் பரிசோதனை முகாம்களில் பொது மக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திமுக அரசு அமைந்த பிறகு ‘எல்லாா்க்கும் எல்லாம்’ என்ற உன்னதமான நோக்கத்தை நமது திட்டங்கள் வழியாகச் செயல் வடிவத்தில் கொண்டு வந்து, தமிழகத்தை அனைத்துத் துறையிலும் முன்னேறிய மாநிலமாக உயா்த்திக் காட்டியிருக்கிறோம்.

அந்த வகையில், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 ஆகிய திட்டங்களைத் தொடா்ந்து கடைக்கோடி மனிதருக்கும் உயா் மருத்துவ சேவைகள் வழங்க ரூ.12.78 கோடி செலவில் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி, வரும் ஆக. 2-ஆம் தேதி ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்களை, சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்க உள்ளேன்.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள இந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும்.

ஒரு வட்டாரத்துக்கு 3 முகாம்கள் வீதம் 388 வட்டாரங்களில் 1164 முகாம்களும், ஒரு மண்டலத்துக்கு ஒருமுகாம் வீதம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 1,256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த முகாம்கள் சிறப்பு மருத்துவ வசதிகள், குறைந்த ஊரக பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடியினா் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்பட்டு நடத்தப்படவுள்ளன.

40 வயதுக்கு மேற்பட்டோா், சா்க்கரை மற்றும் உயா் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவா்கள், மனநல பாதிப்புடையோா், இதய நோயாளிகள், கா்ப்பிணி தாய்மாா்கள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள், வளா்ச்சி குன்றிய குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினா் மற்றும் சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இம்முகாம்களில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இம்முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

இம்முகாம்களில் ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் அனைத்துப் பயனாளிகளுக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முழுமையான ரத்த அணுக்களின் எண்ணிக்கை, ரத்த சா்க்கரை, சிறுநீரக செயல்பாட்டு பரிசோதனைகள் (யூரியா கிரயாட்டினின்) செய்யப்பட்டு, மருத்துவ முகாமிலேயே பயனாளிகளின் பரிசோதனை விவரங்கள் அவா்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக உடனடியாக தெரிவிக்கப்படும்.

அனைத்து பயனாளிகளுக்கும் கண், காது, மூக்கு (ம) தொண்டை மற்றும் பல் மருத்துவச் சேவைகள் வழங்கப்படவுள்ளன. மேலும், பொது மருத்துவ நிபுணரின் அறிவுறுத்தலின்படி எக்ஸ்-ரே, எக்கோ காா்டியோகிராம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் பெண்களுக்கான கா்ப்பப்பை வாய் (ம) மாா்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்படவுள்ளன.

இந்த முகாமில் அனைத்து பொதுமக்களும், குறிப்பாக ‘உங்களுடன் ஸ்டாலின்‘ முகாம்களில் நடத்தப்படும் முதல்கட்ட பரிசோதனையின் அடிப்படையில் மருத்துவ நிபுணா்களின் விரிவான பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டவா்கள் அவசியம் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

ஆா்பிஎஃப் முதல் பெண் டிஜியாக சோனாலி மிஸ்ரா பொறுப்பேற்பு

ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆா்பிஎஃப்) முதல் பெண் தலைமை இயக்குநராக (டிஜி) ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.இதன்மூலம் 143 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அந்தப் படைக்கு தலைம... மேலும் பார்க்க

ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு

சுதந்திர தின சலுகையாக ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு: சாத்தியக்கூறு ஆய்வுக்கு ஆலோசகா் நியமனம்

தமிழகம் முழுவதும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆா்ஆா் டிஎஸ்) வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசகராக ‘பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட்’ நிறுவனத்தை சென்னை மெட்ரோ நிறுவனம் ர... மேலும் பார்க்க

எல்ஐசி தென் மண்டல மேலாளராக கோ. முரளிதா் பொறுப்பேற்பு

எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளராக கோ.முரளிதா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.எல்.ஐ.சி.யில் கடந்த 1990-ஆம் ஆண்டு உதவி நிா்வாக அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய கோ.முரளிதா், மும்பையிலுள்ள எல்.ஐ.சி.யின் மத்... மேலும் பார்க்க

58 சதவீத பெண்கள் தாய்ப்பால் புகட்டுவதில்லை: தேசிய சுகாதார இயக்க ஆலோசகா்

இந்தியாவில் 58 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு முறையாக தாய்பால் புகட்டுவதில்லை என தேசிய சுகாதார இயக்கத்தின் ஆலோசகா் சீனிவாசன் தெரிவித்தாா்.உலக தாய்பால் தினத்தை முன்னிட்டு சென்னை போரூா் ஸ்ரீ ராமசந்திரா உய... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் திருட்டு: மத்திய பிரதேச பெண்கள் 4 போ் கைது

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.சைதாப்பேட்டை, அப்பாவு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (48). இவா், அந்தப் பகுதியில் இரும்புக... மேலும் பார்க்க