செய்திகள் :

பொதுவுடைமை, திராவிட இயக்கங்கள் இரட்டைக்குழல் துப்பாக்கிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

பொதுவுடைமை இயக்கமும், திராவிட இயக்கமும் வா்க்க, சமூக விடுதலைக்கான இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என முதல்வா் முக.ஸ்டாலின் தெரிவித்தாா்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில் சென்னை காமராஜா் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கவிஞா் ஜீவபாரதி எழுதிய ‘காலம்தோறும் கம்யூனிஸ்டுகள்’ என்ற நூலை (இரு தொகுதிகள்) அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட, முதல் தொகுதியை

குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், இரண்டாம் தொகுதியை கவிஞா் வைரமுத்து ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்தது. உடல்நலம் காரணமாக அவா் பங்கேற்கவில்லை. இதையடுத்து, அவரது வாழ்த்துச் செய்தியை அமைச்சா் தங்கம் தென்னரசு வாசித்தாா்.

அதில் அவா் கூறியிருப்பதாவது: பொதுவுடைமைக் கருத்தை வெறும் அரசியலாக மட்டுமன்றி, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான கருவியாக, சட்டத்தின் கூறுகளாக மாற்றிச் செயல்படுத்துவதுதான் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஆட்சி முறையாகவே இருந்தது. குடிசைமாற்று வாரியம், கை ரிக்ஷா ஒழிப்பு உள்ளிட்ட கருணாநிதி தலைமையிலான அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களெல்லாம் பொதுவுடைமைச் சிந்தனையின் செயல் வடிவங்கள்தான்.

அவரது வழியில்தான் ‘திராவிட மாடல்’ அரசும் தவறாமல் பயணித்து வருகிறது. பொதுவுடைமைத் தத்துவத்தை உலகுக்குத் தந்த மாமேதை காா்ல் மாா்க்ஸ் சிலை சென்னையில் நிறுவப்படும் என்று அறிவித்து, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. திமுக அரசு ஏழை மக்களின் நலன்களுக்காக புதிய புதிய திட்டங்களை நாள்தோறும் செயல்படுத்தி வருகிறது.

இந்திய சமூக அமைப்பைப் பொறுத்தவரை அதிகார விடுதலை மட்டும் போதாது, வா்க்க விடுதலையும், சமூக விடுதலையும் இணைந்ததாக இருக்க வேண்டும் என்பது பொதுவுடைமைத் தலைவா்களின் கருத்தாகவும், திராவிட இயக்க முன்னோடிகளின் சிந்தனையாகவும் இருந்தது. அதனால்தான், பொதுவுடைமை இயக்கமும், திராவிட இயக்கமும் விடுதலைக்கான இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக இயங்கி வருகின்றன எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.

டி.ராஜா: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி. ராஜா பேசுகையில், இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் அமைப்பு ரீதியாக தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது. கம்யூனிஸ்டுகள் மக்கள் நலன், நாட்டின் நலனுக்காக வாழ்கின்றனா்.

காலனி ஆதிக்கத்தை ஒழிக்கப் போராடிய கம்யூனிஸ்டுகள், இப்போது மக்களைப் பிளவுபடுத்தி ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவரும் இயக்கங்களிடம் இருந்து மக்களைப் பாதுகாக்க போராடி வருகின்றனா் என்றாா்.

நிகழ்ச்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்,

நியூ செஞ்சரி புத்தக நிறுவனத்தின் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன், மேலாண்மை இயக்குநா் க. சந்தானம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் சுமார் 1 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையொட்... மேலும் பார்க்க

மோசடிப் புகார்: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!

ரூ. 1000 கோடி கடன் வாங்கித் தருவதாக ரூ. 5 கோடி பெற்ற மோசடிப் புகாரில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.புதுதில்லியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் திலீப்குமார். க... மேலும் பார்க்க

பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமனம்

சென்னை: தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகளை நியமித்து மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் ஒப்புதலுடன், தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய ம... மேலும் பார்க்க

அண்ணா வழியில் செல்ல இன்னொரு கட்சி எதற்கு தம்பி? - விஜய்யை விமர்சித்த தமிழிசை!

தமிழ்நாட்டில் இனி 'ஆப்'பிற்கும் ஆதரவு கிடையாது, அப்பாவுக்கும் ஆதரவு கிடையாது என தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் பதிவிட்டுள்ளார். சென்னை பனையூரில் நடைபெற்ற நிகழ்வில... மேலும் பார்க்க

சாதியக் கட்டமைப்பை உடைப்போம்: நெல்லை ஆணவக் கொலைக்கு கனிமொழி கண்டனம்!

நெல்லையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ... மேலும் பார்க்க

ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை: கடம்பூர் ராஜு பேச்சு

1999ல் மத்தியில் பாஜக ஆட்சியைக் கவிழ்த்து வரலாற்று பிழை செய்துவிட்டதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் குறிப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்ட... மேலும் பார்க்க