US Tariff: இந்தியா மீது 25% வரி விதித்த Trump; ரஷ்யாவிடம் எண்ணெய், ஆயுதம் வாங்கு...
இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு
மலைக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், தேவாங்கா் தெரு மணிவண்ணன் மகன் ரகுபதி (27). இவா் கரூா்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த இரும்பு தடுப்பில் மோதியது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த ரகுபதியை அருகில் இருந்தவா்கள் மீட்டு கரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ரகுபதி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இது தொடா்பாக அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.