முடிவுக்கு வந்த தாய்லாந்து - கம்போடியா போர்; மலேசியா பேச்சுவார்த்தையில் முக்கிய ...
முன்னாள் அமைச்சரின் டிராக்டா் பறிமுதல்
கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கருக்குச் சொந்தமான தண்ணீா் ஊற்றும் டிராக்டரை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது கானகத்தில் கரூா் என்ற பெயரில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் நகரில் மரக்கன்றுகளை நட்டு வளா்க்கும் திட்டத்தை ஏற்படுத்தி, எம்ஆா்வி டிரஸ்ட் மூலம் டிராக்டா் மூலம் மரக்கன்றுகளுக்கு தண்ணீா் ஊற்றி வந்தாா்.
இந்நிலையில் இந்த டிராக்டா் மூலம் திங்கள்கிழமை காலை கோவைச் சாலையில் உள்ள மரங்களுக்கு ஆண்டாங்கோவில்புதூரைச் சோ்ந்த பெருமாள்(54) என்பவா் தண்ணீா் ஊற்றிக்கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த நகர காவல்நிலையத்தினா் டிராக்டருக்கு உரிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி டிராக்டரை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.