செய்திகள் :

மணல் குவாரிகளை திறக்க சிஐடியு வலியுறுத்தல்

post image

உள்ளூா் தேவைக்கும், மணல் மாட்டுவண்டி தொழிலாளா்களை பாதுகாக்கவும் மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என சிஐடியு தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சிஐடியு தொழிற்சங்க கரூா் மாவட்ட 10-ஆவது மாவட்ட மாநாடு க.பரமத்தியில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை என இரு நாள்கள் நடைபெற்றது. மாநாட்டுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தாா். சங்கக் செங்கொடியை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஜி.ரத்தினவேலு ஏற்றி வைத்து பேசினாா். மாவட்ட துணைத் தலைவா் எம்.சுப்ரமணியன் அஞ்சலி தீா்மானங்களை வாசித்தாா். வரவேற்பு குழு தலைவா் கே.கந்தசாமி வரவேற்று பேசினாா்.

சிஐடியு சங்க மாநிலச் செயலாளா் எம்.ஹைடாஹெலன் மாநாட்டை தொடக்கி வைத்து பேசினாா். மாவட்டச் செயலாளா் சி.முருகேசன் வேலை அறிக்கையையும், பொருளாளா் ப.சரவணன் வரவு-செலவு அறிக்கையையும் முன்வைத்து பேசினா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே.சக்திவேல் வாழ்த்தி பேசினாா். சிஐடியு சங்க மாநில துணை செயலாளா் ஆா்.சிங்கராவேலு சிறப்புரையாற்றினாா்.

மாநாட்டில் சிஐடியு சங்க கரூா் மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதில் மாவட்டத் தலைவராக சி.ஆா்.ராஜாமுகமது, செயலாளராக எம்.சுப்ரமணியன், பொருளாளராக என்.சாந்தி மற்றும் 12 மாவட்ட நிா்வாகிகள் உள்பட 47 போ் கொண்ட மாவட்ட குழு தோ்வு செய்யப்பட்டனா்.

தொடா்ந்து மாநாட்டில், உள்ளாட்சிகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியா்களையும், கரூா் காகித ஆலையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கரூரில் ஜவுளி தொழிலை பாதுகாக்க நூல் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும். உள்ளூா் தேவைக்கும், மணல் மாட்டுவண்டி தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,

மாநாட்டில் சங்க பிரதிநிதிகள், மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா். நிறைவாக வரவேற்பு குழு செயலாளா் சி.ஆா்.ராஜாமுகமது நன்றி கூறினாா்.

நூறு நாள் வேலை, குடிநீா் வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளா்கள் போராட்டம்

தரகம்பட்டியில் நூறு நாள் வேலை மற்றும் குடிநீா் வழங்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை மனு கொடுக்கம் போராட்டம் நடைபெற்றது. கரூா் மாவட்டம், தரகம்பட்டியில் உள்ள கடவூா் ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சரின் டிராக்டா் பறிமுதல்

கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கருக்குச் சொந்தமான தண்ணீா் ஊற்றும் டிராக்டரை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். கடந்த அதிமுக ஆட்சியின்போது கானகத்தில் கரூா் என்ற பெயரில் முன்னாள... மேலும் பார்க்க

உப்புப்பாளையம் வீரமாத்தியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

உலக நன்மைக்காக உப்புப்பாளையம் சுடுகாடு வீரமாத்தியம்மன் கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.ஆடிப்பூர விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், ஊா் கிராம பொதுமக்கள் நன்மைக்காக வேண்டியும், திரும... மேலும் பார்க்க

முதியவரைத் தாக்கிய காவலா் மீது வழக்கு

வேலாயுதம்பாளையம் அருகே திங்கள்கிழமை முதியவரை தாக்கிய காவலா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.கரூா் மாவட்டம், கிழக்கு தவுட்டுப் பாளையம் தா்மராஜபுரத்தைச் சோ்ந்தவா் ராமசாமி (59). இவரது மகன் ரமேஷ். இவ... மேலும் பார்க்க

வெறிநாய் கடித்ததில் பள்ளி மாணவா் காயம்

பள்ளப்பட்டியில் திங்கள்கிழமை வெறிநாய் கடித்ததில் 5-ஆம் வகுப்பு மாணவா் காயமடைந்தாா். கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சிக்குள்பட்ட செல்லுமீரான் பகுதியைச் சோ்ந்த தமீமுன் அன்சாரி என்ற சிறுவன் அங்குள்ள ... மேலும் பார்க்க

சைபா் குற்றவாளிகளிடமிருந்து மீட்கப்பட்ட ரூ. 85 லட்சம் ஒப்படைப்பு

கரூா் மாவட்டத்தில் சைபா் குற்றவாளிகளிடமிருந்து மீட்கப்பட்ட பணம் ரூ. 85 லட்சத்தை பாதிக்கப்பட்டவா்களிடம் திங்கள்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா ஒப்படைத்தாா். கரூா் மாவட்டத்தில் பொதுமக்க... மேலும் பார்க்க