என்ன, 4,000 டன் நிலக்கரியைக் காணவில்லையா? மேகாலயா அமைச்சர் சொல்லும் அதிர்ச்சி பத...
90s reunion: கோவாவில் ஒன்றுகூடிய 90s சினிமா நட்சத்திரங்கள்.. வைரல் புகைப்படங்கள்!
90 காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த சினிமா பிரபலங்கள் கோவாவில் நடைபெற்ற சந்திப்பில் ஒன்றிணைந்துள்ளனர்.
இயக்குநர்கள் முதல் நடிகர்கள் வரை இந்த மறு சந்திப்பில் கலந்துக்கொண்டுள்ளனர். தங்களின் நினைவுகள் மற்றும் நெகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.
இயக்குநர்களான கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், லிங்குசாமி, மோகன் ராஜா, பிரபு தேவா ஆகியோர் இடம்பெற்றனர். நடிகர்களான ஜெகபதி பாபு, மேகா ஸ்ரீகாந்த் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

90-களில் வெள்ளித்திரையை ஆளுமை செய்த முன்னணி நாயகிகளான சிம்ரன், மீனா, சங்கவி, மாளவிகா, சங்கீதா, ரீமா சென், மகேஸ்வரி மற்றும் சிவரஞ்சனி ஆகியோரும் இணைந்து விழாவை மேலும் மிளிரச் செய்துள்ளனர்.
இந்த நட்சத்திர பட்டாளம், பல தசாப்த கால நட்பை உற்சாகமாக கொண்டாடி தீர்த்துள்ளனர். திரையிலும் திரைக்கு வெளியேயும் உருவான இந்த உறவுகளை எவ்வாறு தக்கவைக்கிறார்கள் என்பதற்கு இந்த புகைப்படங்கள் ஒரு சாட்சியாக உள்ளது.

இந்நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்கள் மீண்டும் ஒன்றாக இணைந்ததை கண்டு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.