இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 30 | Astrology | Bharathi Sridhar | ...
சென்னை: நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - வடமாநில இளைஞர் கைது
சென்னை, புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 30 வயதாகும் இளம்பெண் ஒருவர் கடந்த 26.07.2025-ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை நேரத்தில் (27.07.2025), அவரின் அருகில் ஆண் ஒருவர் அமர்ந்திருந்து அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தார். அதனால் கண்விழித்த இளம்பெண், அதிர்ச்சியடைந்ததோடு சத்தம் போட்டார். உடனே அந்த நபர், இளம்பெண்ணை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். நடந்த சம்பவத்தை இளம்பெண், தன்னுடைய குடும்பத்தினரிடம் கூறினார். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று விசாரித்தனர். அதோடு இளம்பெண், தெரிவித்த தகவலின்படி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தனர்.

அப்போது இளம்பெண்ணுக்கு நள்ளிரவில் பாலியல் தொல்லைக் கொடுத்தது பீகார் மாநிலம், ஜனாக்கூர் பகுதியைச் சேர்ந்த தீபக்குமார் (37) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரைப்பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் தீபக்குமார், அந்தப்பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருவது தெரியவந்தது. மேலும் அவர் இளம்பெண் குடியிருக்கும் பகுதியில் தங்கியிருப்பதும் தெரியவந்தது. சம்பவத்தன்று இளம்பெண் கவீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது, பால்கனி வழியாக வீட்டுக்குள் நுழைந்த தீபக்குமார், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார். இதையடுத்து தீபக்குமாரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.