செய்திகள் :

``நீ எப்படி மோடியை விமர்சிக்கலாம்..." - சு.வெங்கடேசனுக்கு வந்த கொலை மிரட்டல் - வலுக்கும் கண்டனம்!

post image

நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் ஆளும் அரசையும், பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்தும் கடுமையான கேள்விகளை முன்வைத்தார். இந்த நிலையில், பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் வந்திருக்கிறது என்றத் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கொலை மிரட்டலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``மதுரை மக்களின் பேராதரவோடு இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தோழர் சு.வெங்கடேசன் சிறந்த முறையில் மக்கள் சேவை செய்து வருபவர்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருபவர். அவர் இந்துத்துவா சக்திகளின் வகுப்புவாத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி உறுதியான முறையில் நாடாளுமன்றத்திற்குள்ளும், மக்கள் மத்தியிலும் எதிர்ப்பை பதிவு செய்து வருவதை நாடறியும்.

இந்த நிலையில், 28.7.2025 அன்று பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு ஒன்றிய பா.ஜ.க அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தியுள்ளார். அவர் உரையாற்றிய இரவு யாரோ, சு.வெங்கடேசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு `நீ எப்படி பிரதமர் மோடியை விமர்சித்து பேசலாம்? நீ தமிழ்நாட்டுக்குள் உயிரோடு வர முடியாது. நீ தமிழ்நாட்டுக்கு வந்தால் உன்னை நானே கொலை செய்வேன்' என்று கொலை மிரட்டல் விடுத்ததுடன் அசிங்கமான வார்த்தைகளால் திட்டியுள்ளான்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

சமூக விரோதியின் இந்த கொலை மிரட்டலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இந்த கொலை மிரட்டல் தொடர்பாக நேற்று இரவே (28.7.2025) தமிழ்நாடு காவல்துறை இயக்குநருக்கு இணையம் மூலம் சு.வெங்கடேசன் புகார் அனுப்பியுள்ளார். இந்த புகாரை ஏற்றுக் கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுக்கும் வகையில் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.

சு.வெங்கடேசனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது. நாடாளுமன்ற அவைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதற்காக அவர் மீது கொலை மிரட்டல் விடுப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும். இந்த ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் தங்களது வலுவான கண்டனக் குரலை எழுப்புமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

திருவாரூர்: பேச மறுத்த காதலி வீட்டில் நண்பர்களுடன் ரகளை செய்த காதலன்- சண்டையை விலக்க சென்றவர் கொலை!

திருவாரூர் மாவட்டம், பாண்டுகுடி பகுதியைச் சேர்ந்தவர் ஆதம் வயது 23. இவர் தென்காசி, பறையபட்டி பகுதியில் வசித்து வருகிறார். திருவாரூர் புலிவலம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் இளம் பெண் வயது 22. இருவரும... மேலும் பார்க்க

குமரி: போலீஸ் தாக்கியதில் 80 வயது மூதாட்டி மரணமா?- உறவினர்கள் குற்றச்சாட்டும், காவல்துறை விளக்கமும்!

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மத்திகோடு பகுதியை சேர்ந்தவர் சூசைமரியாள்(80). இவரது பேரனை ஒரு வழக்கு சம்மந்தமாக கைது செய்வதற்கு நான்கு காவலர்கள் இன்று ஆதிகாலையில் வீட்டிற்க... மேலும் பார்க்க

போதைக்காக வலி நிவாரணி மாத்திரை விற்பனை.. சென்னையில் 3 பேர்கைது; பின்னணி என்ன?

சென்னையில் போதைக்காக சிலர் உடல் வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. அதனால், பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருக... மேலும் பார்க்க

நெல்லை: அரிவாளுடன் ஊரை பதற வைத்த சிறுவர்கள்.. போலீஸ் துப்பாக்கிச் சூடு! நடந்தது என்ன?

நெல்லை மாவட்டம் பாப்பாகுடி அருகே உள்ள இடைக்கால் பகுதியைச் சேர்ந்த இரு இளஞ்சிறார், நேற்று இரவு ஊருக்கு ஒதுக்கு புறமான குளக்கரை பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மாற்று சம... மேலும் பார்க்க

சென்னை: நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - வடமாநில இளைஞர் கைது

சென்னை, புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 30 வயதாகும் இளம்பெண் ஒருவர் கடந்த 26.07.2025-ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை நேரத்தில் (27.07.2025), அவரின் அருகில் ஆ... மேலும் பார்க்க

Digital arrest scam: 3 மாதத்தில் ரூ.19 கோடி இழந்த டாக்டர்.. வங்கி கணக்கை வாடகைக்கு வாங்கி மோசடி

பணமோசடி, போதைப்பொருள் வழக்குகளில் சிக்கி இருப்பதாக கூறி டிஜிட்டல் முறையில் கைது செய்யப்படுவதாக மிரட்டி, முதியவர்கள், பெண்களிடம் சைபர் கிரிமினல்கள் பணம் பறித்து வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசு வி... மேலும் பார்க்க