மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தற்கொலை
கோவையில் மனைவி இறந்த தூக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை, சுந்தராபுரம் குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 2-ஆவது பகுதியைச் சோ்ந்தவா் சுந்தா் (46). இவரது மனைவி கௌசல்யா மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 21-ஆம் தேதி உயிரிழந்தாா். இதனால் சுந்தா் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுந்தா் தனது மனைவியின் சேலையால் வீட்டில் தூக்கிட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சுந்தராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].