செய்திகள் :

Madhampatty Rangaraj: "சில ஆண்டுகளாகவே ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்"- ஜாய் இன்ஸ்டா பதிவு

post image

நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிசில்டாவைத் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இதுதொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியிருக்கிறார் ஜாய்.

கோவை மாதம்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கராஜ். சமையல் கலைஞராக இருந்து நடிகராக உயர்ந்திருப்பவர். இவருக்கு ஸ்ருதி என்பவருடன் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று இவர்களுக்கு தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாக கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு என்றும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டது. இவர்களுக்கு விவாகரத்து ஆகி விட்டதா என்பது குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது ரங்கராஜ்- ஜாய் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இதுகுறித்து மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்துகொண்ட ஆடை வடிவமைப்பாளர் ஜாய், தனது சமூகவலைதள பக்கத்தில் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், இந்த ஆண்டு குழந்தை வரப்போவதாகவும் 'Baby loading 2025 We are pregnant 6th month of pregnancy' எனக் கூறியிருந்தார்.

'கடந்த சில ஆண்டுகளாகவே ஒன்றாக வாழத் தொடங்கிவிட்டோம்' - ஜாய்

இந்நிலையில் தற்போது தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ஜாய் கிறிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ஒன்றைத் தெளிபடுத்த விரும்புகிறேன். சில வாழ்க்கைப் பயணத்தை அமைதியாகத் தொடங்க வேண்டியிருக்கிறது. கண்ணியத்துடனும், மிகுந்த அன்புடனும் நானும், ரங்கராஜ் அவர்களும் கடந்த சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக எங்கள் வாழ்க்கையைத் தொடங்கிவிட்டோம்.

எங்கள் அன்பின் அடையாளமாக இந்த ஆண்டு எங்களுக்குக் குழந்தை பிறக்கப் போகிறது." என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

TV Update: தீ மிதித்த CWC புகழ்; சங்கத் தேர்தலில் சீரியல் நடிகர் பலே ப்ளான்; குடும்பக் கதைக்கு நோ!

படம் ரிலீசாகட்டும் தாயே..'கலக்கப் போவது யாரு', 'குக்கு வித் கோமாளி' போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான புகழ், சொந்த ஊர் அம்மன் கோவிலில் தீ மிதித்து வழிபாடு செய்துள்ளார்.டிவி மூலம் பிரபலமடைந்த புகழ் ... மேலும் பார்க்க

"பாக்கியலட்சுமி பார்த்துட்டு 20 பேருக்கு மேல இப்படிக் கிளம்பிட்டாங்க" - அனுபவம் பகிரும் ப்ரியா தம்பி

சுமார் ஐந்தாண்டுகள் ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி சீரியல் ஆகஸ்ட் 8ம் தேதியுடன் நிறைவடைகிறது. விஜய் டிவி வரலாற்றில் அதிக எபிசோடுகள் ஒளிபரப்பான தொடர் என்கிற பெருமையைப் பெற்றிருக்கும் இந்த சீரியலின் கி... மேலும் பார்க்க

பாக்கியலட்சுமி சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பு; 'அனைத்திற்கும் நன்றி'- இனியாவின் உருக்கமான பதிவு!

விஜய் டிவியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒளிப்பரப்பாகி வந்த பிரபல 'பாக்கியலட்சுமி' தொடர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. தற்போது இறுதிக்கட்ட எபிசோடுகள் தொடர்பான காட்சிகள் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறத... மேலும் பார்க்க

Madhampatty Rangaraj:`6வது மாதமாக குழந்தையைச் சுமக்கிறேன்'- மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்த ஜாய்

நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிசில்டாவைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.கோவை மாதம்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கராஜ். சமையல் கலைஞராக இருந்து நடிகராக உயர... மேலும் பார்க்க