குயிண்டன் டாரண்டினோ - டேவிட் ஃபிஞ்சர் கூட்டணியில் புதிய படம்!
இயக்குநர் டேவிட் ஃபிஞ்சர் தன் புதிய படத்தின் படப்பிடிப்பைத் துவங்கியுள்ளார்.
ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர்களான குயிண்டன் டாரண்டினோ மற்றும் டேவிட் ஃபிஞ்சர் இணைந்து புதிய படத்தை உருவாக்கத் திட்டமிட்டிருந்தனர்.
டாரண்டினோ இயக்கத்தில் வெளியாகி ஆஸ்கர் வென்ற ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட் (once upon a time in hollywood) படத்தின் தொடர்ச்சியாக உருவாகவுள்ள இப்படத்திற்கு ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்: அட்வென்சர் ஆஃப் கிளிப் பூத் (once upon a time in hollywood: adventures of cliff booth) எனப் பெயரிட்டுள்ளனர்.
படத்தின் கதையை குயிண்டன் டாரண்டினோ எழுத, இயக்குநர் டேவிட் ஃபிஞ்சர் இப்படத்தை இயக்குகிறார். படத்தின் நாயகனாக நடிகர் பிராட் பிட் நடிக்கிறார்.

தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எஃப் 1 படத்தில் சிறப்பாக நடித்திருந்த பிராட் பிட்டின் இப்படத்திற்காகவும் ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.
இதையும் படிக்க: எதற்கும் துணிந்தவன் வசூலை வேறு எந்த சூர்யா படங்களும் தாண்டவில்லை: பாண்டிராஜ்