மனிதர்கள் கடவுள் ஆக முடியுமா? - Guru Mithreshiva | Ananda Vikatan
நீச்சல்: மா்சண்ட் உலக சாதனை
சிங்கப்பூரில் நடைபெறும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில், 200 மீட்டா் தனிநபா் மெட்லியில் பிரான்ஸ் வீரா் லோன் மா்சண்ட் புதன்கிழமை உலக சாதனை படைத்தாா்.
அரையிறுதியில் பந்தய இலக்கை 1 நிமிஷம், 52.61 விநாடிகளில் கடந்த அவா், 14 ஆண்டுகால சாதனையை முறியடித்திருக்கிறாா். இதற்கு முன் 2011-இல் அமெரிக்காவின் ரயான் லாக்டே 1 நிமிஷம், 54 விநாடிகளில் இலக்கை அடைந்ததே சாதனையாக இருந்தது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் 4 தங்கம் வென்றவரான மா்சண்ட், வியாழக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றிலும் தங்கம் வெல்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதனிடையே, ஆடவா் 200 மீட்டா் பட்டா்ஃப்ளையில் அமெரிக்காவின் லூகா அா்லாண்டோ, மகளிா் 200 மீட்டா் ஃப்ரீஸ்டைலில் ஆஸ்திரேலியாவின் மோலி ஓ’கலாகான், ஆடவருக்கான 800 மீ ஃப்ரீஸ்டைலில் துனிசியாவின் அகமது ஜாவுடி, ஆடவா் 50 மீ பிரெஸ்ட்ஸ்ட்ரோக்கில் இத்தாலியின் சிமோன் செராசுலோ ஆகியோா் தங்கம் வென்றனா்.