`விவாகரத்து விசாரணையின்போது அந்த டி-சர்ட் அணிந்து வந்தது ஏன்?’ - சஹால் சொன்ன விள...
முத்தக் காட்சி அவசியமில்லை: ஷேன் நிகம்
பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம் திரைப்படங்களில் இடம்பெறும் முத்தக்காட்சி குறித்து பேசியுள்ளார்.
பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஷேன் நிகம் நாயகனாகவும் கவனம் பெற்று வருகிறார்.
தமிழில் மெட்ராஸ்காரன் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியிருந்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தற்போது, ஷேன் நிகம் பல்டி எனப் பெயரிட்ட தன் 25-வது படத்தில் நடித்து வருகிறார். உன்னி சிவலிங்கம் இயக்கும் இப்படம் தமிழ், மலையாளத்தில் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய ஷேன், “ஒரு திரைப்படத்தின் சூழல் நிர்பந்தித்தால் மட்டுமே நான் முத்தக் காட்சிகளில் நடிக்கிறேன். ஆனால், காதலர்களின் நெருக்கத்தைக் காட்ட வேறு சிறப்பான வழிகள் இருக்கும்போது முத்தக் காட்சியை அவசியமற்றதாகவே பார்க்கிறேன். என் திரைப்படங்களைக் குடும்பத்துடன் காணவே நான் ஆசைப்படுகிறேன். அதனால், முத்தக் காட்சிகளில் நடிக்க பெரிய விருப்பமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
ஷேன் நிகனின் இந்தப் பார்வை பலரிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இதையும் படிக்க: மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - பாண்டிராஜ் கூட்டணி!