செய்திகள் :

ஜூலை மாதத்தின் சிறந்த வீரர்..! விருதுகளைக் குவிக்கும் மெஸ்ஸி!

post image

எம்எல்எஸ் தொடரில் லியோனல் மெஸ்ஸி பல விருதுகளை குவித்து வருகிறார்.

ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (38 வயது) தற்போது அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் விளையாடி வருகிறார்.

கடைசி போட்டியில் மெஸ்ஸி விளையாட தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இன்றைய போட்டியில் மெஸ்ஸி கலந்துகொண்டார்.

இன்று அதிகாலை நடந்த இந்தப் போட்டியில் அட்லஸ் அணியுடன் இன்டர் மியாமி அணி மோதியது. இதில் 2-1 என மியாமி வென்றது.

இந்தப் போட்டியில் 2 அசிஸ்ட், 3 மிகப்பெரிய வாய்ப்புகள் உருவாக்கியது என மெஸ்ஸி அசத்தலாக விளையாடினார்.

இந்தச் சிறப்பான ஆட்டத்துக்காக ஆட்ட நாயகன் விருது பெற்றார். அத்துடன் இந்த மாதத்திற்கான சிறந்த வீரர் விருதையும் பெற்றுள்ளார்.

கடந்த முறையும் மெஸ்ஸி இந்த விருதை வென்றிருந்தார். இந்தாண்டில் 18 போட்டிகளில் 18 கோல்கள், 7அசிஸ்ட்டுகளை செய்துள்ளார்.

Player of the Month. Again. Just Messi things.
மெஸ்ஸிக்கான சிறப்பு போஸ்டர்.

இந்த விருது இந்த மாதத்தில் 5 போட்டிகளில் 8 கோல்கள், 3 அசிஸ்ட்டுகளை செய்தத்திற்காக கொடுக்கப்பட்டதென எம்எல்எஸ் தெரிவித்துள்ளது.

Lionel Messi has been collecting many awards in the MLS series.

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்? 12 ராசிகளுக்கும்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஆகஸ்ட் 1 - 7) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)விடாமுயற்சி முன்... மேலும் பார்க்க

7 நாளில் ரூ.50 கோடி வசூலித்த தலைவன் தலைவி!

பாண்டிராஜ் இயக்கிய தலைவன் தலைவி படத்தின் வசூல் ரூ.50 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம்... மேலும் பார்க்க

ஓடிடியில் வெளியானது 3 பிஎச்கே!

சித்தார்த் நடிப்பில் வெளியான 3 பிஎச்கே திரைப்படத்தின் ஓடிடியில் வெளியாகியுள்ளது.நடிகர் சித்தார்த்தின் 40-வது படமாக உருவான 3பிஎச்கே திரைப்படத்தை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கியிருந்தார்.இதில் சரத் குமார்,... மேலும் பார்க்க

தடுமாறும் இந்தியா; தோள் கொடுக்கும் கருண் நாயா்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்துள்ளது.101 ரன்களுக்கே இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், மிடில் ஆ... மேலும் பார்க்க

புலவயோ டெஸ்ட்: நியூஸிலாந்து 307

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 96.1 ஓவா்களில் 307 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.முன்னதாக, புதன்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே தனது ... மேலும் பார்க்க