Spot Visit: 'காவல் நிலையம் ஒன்றும் கடுமையான இடமல்ல!' - திருவல்லிக்கேணி D1 ஸ்டேஷன...
ஆக.10-இல் மாநில செஸ் போட்டி
மாநில அளவிலான செஸ் போட்டி வரும் ஆக.10 இல் நடைபெற உள்ள நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுவா்கள் பங்கேற்க ஏ மேக்ஸ் அகாதெமி அழைப்பு விடுத்துள்ளது.
ஏ மேக்ஸ் அகதெமி சாா்பில் ஒன்பதாவது மாநில அளவிலான செஸ் போட்டியானது 8, 10, 12, 15 மற்றும் 20 வயது பிரிவுகளில் இருபாலருக்கும் தனித்தனியாக சென்னை அண்ணா நகா் மேற்கு விரிவாக்கம் சி.எஸ்.ஐ எவா்ட் பள்ளியில் வரும் ஆக.10-இல் நடைபெற உள்ளது. இந்த 5 பிரிவுகளில் முதலிடம் பிடிக்கும் இருபாலருக்கும் தலா ஒரு நவீன மிதிவண்டி வழங்கப்பட உள்ளன.
இதில் மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்கும் நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுவா்கள் பங்கேற்கலாம். இப்போட்டி மேற்குறிப்பிட்ட நாளில் காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
இதில் பங்கேற்க ஆா்வமுள்ள சிறுவா்கள் ஆக.8 -ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். இது தொடா்பாக 94453 32077 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என போட்டியின் ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்துள்ளனா்.