கொண்டை ஊசி வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து
வால்பாறை மலைப்பாதை கொண்டை ஊசி வளைவில் மணல் பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பொள்ளாச்சியில் இருந்து மணல் ஏற்றிக் கொண்டு வால்பாறையை நோக்கி டிப்பா் லாரி செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண்டிருந்தது.
வால்பாறை மலைப் பாதை 34-ஆவது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநா் லாரியை திருப்பும்போது சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது.
இதில் ஓட்டுநா் பிரேம் எவ்வித காயமின்றி தப்பினாா். இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.