CM Stalin: சிகிச்சைக்குப் பிறகு தலைமைச் செயலகம் வரும் முதல்வர் ஸ்டாலின்; 3-ம் தே...
ஓவல் டெஸ்ட்: பும்ராவுக்குப் பதிலாக ஆகாஷ் தீப்!
இந்தியாவின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஓவல் டெஸ்ட்டில் விளையாடமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
மான்செஸ்டர் டெஸ்ட்டில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி தோல்வி அடையாமல் சமனில் முடித்தது.
கடைசி டெஸ்ட்டாக ஓவல் டெஸ்ட் ஜூலை 31-இல் நடைபெறவிருக்கிறது.
வேலைப் பளு காரணமாக ஜஸ்ப்ரீத் பும்ரா கடைசி டெஸ்ட்டில் விளையாடமாட்டார் எனக் கூறப்படுகிறது.
31 வயதாகும் பும்ரா 48 டெஸ்ட்டில் 219 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 140கி.மீ./மணி வேகத்தில் பந்துவீசும் பும்ராவின் திறனும் படிப்படியாக குறைந்துவருவது குறிப்பிடத்தக்கது.
பிசிசிஐ குழுவிடமிருந்து இஎஸ்பிஎன் கிரிக் இன்பேவிக்கு கிடைத்த தகவலின்படி, “பிசிசிஐ மருத்துவக் குழு பும்ராவின் நீண்டநாள் உடல்நலன் கருதி கடைசி டெஸ்ட்டில் விளையாட மாட்டார்” எனக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கம்பீர், “கடைசி டெஸ்ட்டுக்கான பிளேயிங் லெவனை இன்னும் இறுதியாக்கவில்லை. யார் யார் இருந்தால் நன்றாக இருக்கும் என யோசித்து வருகிறோம்” என்றார்.