இன்று முக்கிய அறிவிப்பு? முதல்வர் ஸ்டாலினுடன் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு!
காலனித்துவ காலத்தில் இருக்கிறோமா? ஓவல் பிட்ச் மோதல் பற்றி முன்னாள் வீரர்!
ஓவல் பிட்ச் மேற்பார்வையாளுடன் நடந்த மோதல் குறித்து முன்னாள் இந்திய வீரர் காலனித்துவ காலத்திலா இருக்கிறோம் எனக் கூறியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
மான்செஸ்டர் டெஸ்ட்டில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி தோல்வி அடையாமல் சமனில் முடித்தது.
கடைசி டெஸ்ட்டாக ஓவல் டெஸ்ட் ஜூலை 31-இல் நடைபெறவிருக்கிறது.
இதற்காக இந்திய அணி பயிற்சி செய்தபோது ஓவல் பிட்ச் மேற்பார்வையாளர்கள் பிட்சிலிருந்து 2.5 மீ தள்ளி இருக்கும்படி கூற, இந்திய பயிற்சியாளர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்த வாக்குவாதத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
இந்நிலையில், முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “இங்கிலாந்து பயிற்சியாளர்கள் பிட்ச்சில் இறங்கி சோதனை செய்யலாம். ஆனால், இந்திய பயிற்சியாளர்கள் செய்யக்கூடாதா? நாம் காலனித்துவ காலத்திலா இருக்கிறோம்? ” எனப் பதிவிட்டுள்ளார்.