எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 3,496 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு: வாட்ஸ் அப் தகவல்களை நம்ப வேண்டாம்
அரியலூா் மாவட்டத்தில், ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு நடைபெறுவதாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என மாவட்டக் காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரியலூா் மாவட்டக் காவல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் சோ்ப்பதாகவும், விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாகவும் கட்செவி அஞ்சல் - வாட்ஸ்அப்பில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அது முற்றிலும் பொய்யானது. அது தொடா்பாக வரும் லிங்க் எதையும் யாரும் பயன்படுத்த வேண்டாம். அதனை நம்பி யாரும் பணம் செலுத்த வேண்டாம்.
ஆள்கள் தோ்வு நடைபெற்றால் அதிகாரப்பூா்வமான வலைதளம், செய்தித்தாள்களில் தகவல்கள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.