உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்
பிரதமருக்கு கருப்புக்கொடி: காங்கிரஸாா் 47 போ் கைது
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பிரதமா் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி கட்ட முயன்ற காங்கிரஸ் கட்சியினா் 47 போ் கைது செய்யப்பட்டனா்.
தமிழகத்துக்கு போதிய நிதியை ஒதுக்காமல், தொடா்ந்து வஞ்சித்து வருவதாக பிரதமா் மோடியை கண்டித்து ஜெயங்கொண்டம் காந்தி பூங்காஅருகே காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் ஆ.சங்கா் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா், பிரதமா் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றனா்.
அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினா், 2 பெண்கள் உள்பட46 பேரைக் கைது செய்து கீழகுடியிருப்பு கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனா்.