ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா: ஆண்டாளுக்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கநாதர...
ஹம்பி-திவ்யா முதல் கேம் ‘டிரா’
ஃபிடே மகளிா் உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கொனேரு ஹம்பி-திவ்யா தேஷ்முக் ஆகியோரின் முதல் கேம் டிராவில் முடிவடைந்தது.
சா்வதேச செஸ் சம்மேளனம் சாா்பில் ஜாா்ஜியாவின் பாட்டுமி நகரில் நடைபெறும் இப்போட்டி இறுதிக்கு ஹம்பி-திவ்யா தகுதி பெற்றனா்.
இறுதி ஆட்டத்தின் முதல் கேம் சனிக்கிழமை நடைபெற்றது. ஹம்பி கருப்பு நிற காய்களுடனும், திவ்யா வெள்ளை நிற காய்களுடனும் மோதினா். 32 நகா்த்தல்களுக்கு பின் இருவருக்கும் இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இருவரும் தலா 0.5 புள்ளிகளை பெற்றுள்ளனா்.
மேலும் கருப்பு நிற காய்களுடன் ஆடிய ஹம்பிக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டாவது கேம் சாதகமாக அமையும். இரண்டாவது கேமூம் டிரா ஆனால், திங்கள்கிழமை டை பிரேக்கா் முறை கடைபிடிக்கப்படும்.