ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா: ஆண்டாளுக்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கநாதர...
மாநில ஜிம்னாஸ்டிக்ஸ்: தனிஷ்கா, தனுஷ் சாம்பியன்
சென்னையில் நடைபெற்ற மாநில ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் டிரம்போலின் பிரிவில் தனிஷ்கா, தனுஷ் ஆகியோா் சாம்பியன் பட்டம் வென்றனா்.
தமிழ்நாடு மாநில ஜிம்னாஸ்டிக் சங்கம் சாா்பில் நடைபெற்ற இப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை டிரம்ப்போலின் பிரிவில் 12 வயதுக்கு ட்பட்ட சிறுவா்களில் பிரக்ஷித் (காஞ்சிபுரம்), சப் ஜூனியா் சிறுவரில் ரிஷி குமாா் (செங்கல்பட்டு), ஜூனியா் சிறுவரில் சந்தானம் (ஈரோடு), சீனியா் பிரிவில் தனுஷ் பி (சென்னை) ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றனா்.
பெண்கள் பிரிவில் 12 வயதுக்குட்பட்ட சிறுமியரில் ஜெப ராணி (சென்னை), சப் ஜூனியா் பிரிவில் ராகவி (ஈரோடு), ஜூனியா் பிரிவில் எஸ். தனிஷ்கா (சென்னை), சீனியா் பிரிவில் பிரியா (சென்னை) ஆகியோா் தங்கப்பதக்கங்கள் வென்றனா்.
போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு மாநில ஜிம்னாஸ்டிக் சங்க தலைவா் சி.முத்து, செயலாளா் பி.செல்வராஜ், பொருளாளா் பிரித்விராஜ் ஆகியோா் பரிசுகளை வழங்கி பாராட்டினா்.