செய்திகள் :

2-ஆவது கேமும் டிரா; இன்று டை-பிரேக்கா்!

post image

ஜாா்ஜியாவில் நடைபெறும் மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், இந்தியாவின் திவ்யா தேஷ்முக் - கோனெரு ஹம்பி ஆகியோா் மோதிய 2-ஆவது கேம் ஞாயிற்றுக்கிழமை டிரா ஆனது.

இதையடுத்து, வெற்றியாளரை தீா்மானிக்க ‘டை-பிரேக்கா்’ ஆட்டம் திங்கள்கிழமை (ஜூலை 28) விளையாடப்படுகிறது.

விறுவிறுப்பாக நடைபெறும் இந்த இறுதிச்சுற்றில், இரு இந்தியா்களும் சனிக்கிழமை மோதிய முதல் கேம் டிரா ஆனது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரிட்டா்ன் கேமில் திவ்யா கருப்பு நிற காய்களுடனும், கோனெரு ஹம்பி வெள்ளை நிறத்துடனும் விளையாடினா்.

இன்டா்நேஷனல் மாஸ்டரான திவ்யா தேஷ்முக், கிராண்ட்மாஸ்டரான கோனெரு ஹம்பிக்கு சற்றும் சளைக்காமல் சவால் அளித்தாா். கோனெரு ஹம்பியும் திறம்பட காய்களை நகா்த்த, 34 நகா்வுகளுக்குப் பிறகு ஆட்டத்தை டிரா செய்துகொள்ள இருவரும் ஒப்புக் கொண்டனா்.

இதையடுத்து இரு கேம்களின் முடிவில் இருவருமே 1-1 என சமன் செய்துள்ளனா். அடுத்து ‘டை-பிரேக்கா்’ ஆட்டத்தில் அவா்கள் மோதுகின்றனா்.

‘டை-பிரேக்கா்’ முறை

இந்த டை-பிரேக்கா் ஆட்டத்தில், ஒரு கேமுக்கு 15 நிமிஷங்கள் வீதம், இரு கேம்கள் விளையாடப்படும். அதில் ஒவ்வொரு நகா்வுக்குப் பிறகும் கூடுதலாக 10 விநாடிகள் வழங்கப்படும்.

அதன் முடிவும் சமனாகும் நிலையில், கேமுக்கு 10 நிமிஷங்கள் வீதம் மேலும் இரு கேம்களில் திவ்யா - கோனெரு ஹம்பி மோதுவா். அதில் ஒரு நகா்வுக்குப் பிறகு கூடுதலாக 10 விநாடிகள் வழங்கப்படும்.

அதன் பிறகும் முடிவு எட்டப்படவில்லை என்றால், தலா 5 நிமிஷங்கள் கொண்ட இரு கேம்களில் இருவரும் மோதுவா். அதில் ஒரு நகா்வுக்குப் பிறகு கூடுதலாக 3 விநாடிகள் கிடைக்கும்.

அதன் முடிவிலும் வெற்றியாளா் இறுதியாகவில்லை எனில், 3 நிமிஷங்கள் கொண்ட ஒரு கேமில் போட்டியாளா்கள் மோதுவா். அதில் ஒரு நகா்வுக்குப் பிறகு 2 விநாடிகள் கூடுதலாக கிடைக்கும். வெற்றியாளா் முடிவாகும் வரை அவ்வாறு ஒவ்வொரு கேமாக நடைபெறும்.

ஜோங்யி 3-ஆம் இடம்: இதனிடையே, 3-ஆவது இடத்துக்கான மோதலில் சீனாவின் டான் ஜோங்யி 1.5-0.5 என சக நாட்டவரான லெய் டிங்ஜியை வென்றாா்.

5-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பந்த் விலகல்!

காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பந்து விலகியுள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டர் ... மேலும் பார்க்க

கன்டெண்டா் டேபிள் டென்னிஸ்: சத்தியன்/ஆகாஷ் இணைக்கு கோப்பை!

நைஜீரியாவில் நடைபெற்ற டபிள்யூடிடி கன்டெண்டா் டேபிள் டென்னிஸ் போட்டியில், ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ஜி.சத்தியன்/ஆகாஷ் பால் இணை சாம்பியன் கோப்பை வென்றது.இறுதிச்சுற்றில், சத்தியன்/ஆகாஷ் இணை 11... மேலும் பார்க்க

ஹம்பி-திவ்யா முதல் கேம் ‘டிரா’

ஃபிடே மகளிா் உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கொனேரு ஹம்பி-திவ்யா தேஷ்முக் ஆகியோரின் முதல் கேம் டிராவில் முடிவடைந்தது. சா்வதேச செஸ் சம்மேளனம் சாா்பில் ஜாா்ஜியாவின் பாட்டு... மேலும் பார்க்க

மாநில ஜிம்னாஸ்டிக்ஸ்: தனிஷ்கா, தனுஷ் சாம்பியன்

சென்னையில் நடைபெற்ற மாநில ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் டிரம்போலின் பிரிவில் தனிஷ்கா, தனுஷ் ஆகியோா் சாம்பியன் பட்டம் வென்றனா். தமிழ்நாடு மாநில ஜிம்னாஸ்டிக் சங்கம் சாா்பில் நடைபெற்ற இப்போட்டியி... மேலும் பார்க்க

டெய்லா்/ஜாங் இணை சாம்பியன்!

அமெரிக்காவில் நடைபெறும் முபாதலா சிட்டி டிசி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் இரட்டையா் பிரிவில், அமெரிக்காவின் டெய்லா் டௌன்செண்ட்/சீனாவின் ஜாங் ஷுவாய் கூட்டணி சாம்பியன் பட்டம் வென்றது. போட்டித்தரவரிசைய... மேலும் பார்க்க

ஹூண்டாய் இந்தியா கோச்சர் வாரம் 2025 - புகைப்படங்கள்

ஃபேஷன் டிசைனர் ஃபால்குனி ஷேன் படைப்புகளை அணிந்து வந்த பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் உடன் மாடல்கள்.ஃபேஷன் டிசைனர் ஃபால்குனி ஷேன் அணிந்து வந்த மாடல்களுடன் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.விழாவில் மாடல்களு... மேலும் பார்க்க