வாடகைத் தாய் குழந்தை முறையில் இப்படி ஒரு மோசடியா? ஒரு குழந்தை ரூ.35 லட்சம்!
``நான் இந்தியா-பாக் தாக்குதலையே நிறுத்தியவன்; இது ரொம்ப ஈசி'' தாய்லாந்து-கம்போடியா குறித்து ட்ரம்ப்
'இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலை நான் தான் நிறுத்தினேன்' - இது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் பதிவு செய்து வரும் ஒரு விஷயம். அவர் இப்படி கூறிய கூற்றின் எண்ணிக்கை 25-ஐ தாண்டி விட்டது.
மோடி - ட்ரம்ப் போன்கால்
கடந்த மாதம், இந்திய பிரதமர் மோடி - ட்ரம்ப் பேசிய போன்காலில், 'ட்ரம்ப் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தவில்லை' என்பது தெளிவாக அவருக்கு சொல்லப்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால், அதன் பிறகும் இன்னமும் அவர், அந்தக் கூற்றை விடுவதாக இல்லை.
தாய்லாந்து - கம்போடியா தாக்குதல் தொடங்கியப்போதே, இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலை உவமையாக காட்டியிருந்தார்.
ட்ரம்ப் என்ன கூறினார்?
இந்த நிலையில், நேற்று, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் பேசும்போது, "நாம் தாய்லாந்து மற்றும் கம்போடியா உடன் நிறைய வணிகம் செய்து வருகிறோம்.
இன்னமும் அவர்கள் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்பதைப் படிக்கிறேன். இது எனக்கு மிகவும் எளிதான விஷயம் என்று கூறுகிறேன். காரணம், நான் இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தி உள்ளேன்.
நான் இரு நாட்டு பிரதமர்களுக்கும் போன் செய்தேன். இந்தப் போரை நிறுத்தவில்லை என்றால் அவர்களுடனான வணிக ஒப்பந்தத்தை நிறுத்துவேன் என்று கூறினேன்.

அதன் பின், இந்தப் போரை நிறுத்த அவர்கள் விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன்.
இந்தியாவும், பாகிஸ்தானும் மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராக இருந்தார்கள்.
ஆக, இந்த மாதிரியான விஷயங்களை, என்னால் வணிகத்தைப் பயன்படுத்தி நிறுத்த முடியுமானால், அது என்னுடைய கௌரவம்" என்று கூறியுள்ளார்.
இன்னும் எத்தனை தடவை ட்ரம்ப் இந்தக் கூற்றை முன்வைப்பாரோ?