‘ஐ லவ் யூ’ சொல்வதெல்லாம் பாலியல் குற்றமாகாது! -உயர் நீதிமன்றம்
ஜெர்மனியில் பயணிகள் ரயில் தடம்புரண்டதில் 3 பேர் பலி; பலர் காயம்
ஜெர்மனியில் பயணிகள் ரயில் தடம்புரண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.
தென்மேற்கு ஜெர்மனியில் ரிட்லிங்கன் மற்றும் முண்டர்கிஙன் நகரங்களுக்கு இடையே பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தடம்புரண்டது. இந்த விபத்தில் ரயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்றன.
இதில் 3 பேர் பலியான நிலையில் பலர் காயமடைந்தனர்.
விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே காயமடைந்தவர்களை அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல ஹெலிகாப்டர்கள் வந்தன. மேலும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உ.பி. கோவிலில் கூட்டநெரிசல்: இருவர் பலி; 30 பேர் காயம்!
விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது என்று போலீஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. அப்பகுதியில் கடுமையான புயல்கள் வீசியதால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ஜெர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிக்மாரிங்கன் நகரிலிருந்து உல்ம் நகருக்கு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தபோது, காட்டுப் பகுதியில் தடம் புரண்டது.