எழுத்தாளா்களுக்கு மிகப்பெரிய உந்து சக்தி கலாப்ரியா: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்...
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் குறைந்து ரூ.86.67ஆக நிறைவு!
மும்பை: டாலர் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 15 காசுகள் குறைந்து ரூ.86.67 ஆக முடிந்தது.
ஆகஸ்ட் 1 காலக்கெடுவிற்கு முன்னதாக, இந்தியா-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தையின் முடிவுக்காக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகம் செய்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட எதிர்மறையான போக்கு முதலீட்டாளர்களின் உணர்வுகளை வெகுவாக பாதித்ததாக தெரியவந்ததுள்ளது.
அடுத்த வாரம் அமெரிக்க ரிசர்வ் மற்றும் ஜப்பான் வங்கியின் பணவியல் கொள்கை முடிவுகள் வெளியாக இருப்பதால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.47 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.86.40 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.86.67 ஐ தொட்ட நிலையில், முடிவில் 15 காசுகள் குறைந்து ரூ.86.67-ஆக முடிந்தது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) அன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 12 காசுகள் குறைந்து ரூ.86.52 ஆக நிலைபெற்றது.
இதையும் படிக்க: 3வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!
Rupee Falls 15 Paise to 86.67 against US $