Anirudh: "வி.டியின் அந்த மனசு..., கிங்டம் ஒரு மைல்கல்!" - இசை வெளியீட்டு விழாவில...
தச்சன்விளையில் தீ விபத்து: 100 முருங்கை மரங்கள் எரிந்து சேதம்
சாத்தான்குளம் அருகே உள்ள தச்சன்விளையில் தோட்டத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட முருங்கை மரங்கள் எரிந்து சேதமாகின.
தச்சன்விளை கிராமத்தைச் சோ்ந்த ஆல்வின், அதே பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் முருங்கை விவசாயம் செய்து வருகிறாா். அப்பகுதியில் வீசிய காற்றில் அங்குள்ள உயா் அழுத்த மின் வயரில் திங்கள்கிழமை மதியம் தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தால் தீ பரவி, தோட்டத்தில் நின்ற 100க்கும் மேற்பட்ட முருங்கை மரங்கள் எரிந்து சேதமாகின. திசையன்விளை தீயணைப்பு நிலைய வீரா்கள் வந்து, தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.
பாதிக்கப்பட்ட விவசாயிக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமென, சாத்தான்குளம் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளா் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.