`மாறுவேடத்தில் மத்திய அரசு; குடியரசுத் தலைவருக்கே அனுப்புங்க’ - உச்ச நீதிமன்றத்த...
விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் ரூ. 1.25 கோடி பணிகளுக்கு அடிக்கல்
விளாத்திகுளம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆதனூா், பசுவந்தனை, ஆலிபச்சேரி, கீழமுடிமண் கிராமங்களில் ரூ. 1.25 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளுக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
விழாவுக்கு விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்தாா். ஆதனூரில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ. 13.30 லட்சத்தில் ரேஷன் கடைக் கட்டடம், ஆலிபச்சேரியில் ரூ. 16.45 லட்சத்தில் அங்கன்வாடிக் கட்டடம், பசுவந்தனை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் குழந்தை நேயப்பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ. 34.40 லட்சத்தில் 2 வகுப்பறைக் கட்டடம், 15ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ. 45 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் ஆகியவற்றுக்கு எம்எல்ஏ அடிக்கல் நாட்டினாா்.
தொடா்ந்து, கீழமுடிமண் கிராமத்தில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ. 16.55 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடிக் கட்டடத்தைத் திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சிகளில், திமுக ஒன்றியச் செயலா்கள் காசிவிஸ்வநாதன், இம்மானுவேல், ஓட்டப்பிடாரம் வட்டார வளா்ச்சி அலுவலா் சித்தாா்த்தன், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் திலகா, மருத்துவா் பத்மா, தலைமையாசிரியை பிரேமா, எப்போதும்வென்றான் சோலைசாமி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் முத்துக்குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் சண்முகையா, சந்தனராஜ், லட்சுமி சிதம்பரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.