செய்திகள் :

ராமேஸ்வரம்: மீண்டும் 5 பேர் கைது; ஒன்றரை மாதத்தில் 31 மீனவர்களைக் கைது செய்த இலங்கை; பின்னணி என்ன?

post image

ராமநாதபுரம் மாவட்டம் துவங்கி நாகபட்டினம் வரை உள்ள 6 மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரமாக மீன்பிடி தொழிலையே நம்பி உள்ளனர். அதிலும் குறிப்பாக வங்கக் கடலில் உள்ள பாக் நீரிணை பகுதியே அவர்களின் வாழ்வாதார தளமாக இருந்து வருகிறது.

அதை நம்பியே பாக் நீரிணை பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளுக்காக தமிழக மீனவர்களைக் குறிவைத்துத் தாக்குதல்களையும் சிறைபிடிப்புகளையும் தொடர்ந்து வருகின்றனர் இலங்கை கடற்படையினர்.

ராமேஸ்வரம் துறைமுகத்தில் படகுகள்

மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் 26 மீனவர்களையும் 4 விசைப்படகுகளையும் சிறை பிடித்துச் சென்றுள்ளது இலங்கை கடற்படை.

இந்நிலையில் நேற்று ராமேஸ்வரத்திலிருந்து 391 படகுகளில் மீன் துறை அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் பாரம்பர்யமாக மீன்பிடிக்கும் பாக் நீரிணை பகுதியில் நேற்று இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவரது விசைப்படகினை சிறை பிடித்துச் சென்றனர்.

மேலும் அந்தப் படகில் மீன்பிடிக்கச் சென்ற படகின் உரிமையாளர் ஜஸ்டின் மற்றும் மோபின், சைமன், சேகர், டெனிசன் ஆகிய 5 மீனவர்களையும் சிறை பிடித்துச் சென்றனர்.

கடந்த ஒன்றரை மாதங்களில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்ட 26 மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று மேலும் 5 மீனவர்கள் சிறைபிடித்து செல்லப்பட்டிருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் சிறை பிடிக்கப்பட்ட படகுகள் ஒன்று கூட விடுவிக்கப்படாத நிலையில் மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டு வந்தனர். ஆனால் கடந்த ஒன்றரை மாதங்களில் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்ட ஒரு மீனவர் கூட விடுவிக்கப்படவில்லை.

கடந்த மாதம் கைதான மீனவர்கள்

வழக்கமாக சிறை பிடிக்கப்படும் மீனவர்களை விசாரணைக்குப் பின் உள்ளூர் போலீஸாரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைப்பர். நீதிமன்றத்தில் அவர்களை போலீஸார் ஆஜர் படுத்திய பின் முதல் வாய்தாவின் போதே விடுவிக்கப்படுவார்கள்.

ஆனால் கடந்த ஒன்றரை மாதங்களில் பிடிபட்ட 26 மீனவர்கள் 3 வாய்தாக்கள் முடிந்தும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று மேலும் 5 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பது தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழிலைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"என் தந்தை தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்... அந்த வலி எனக்கு புரியும்" - மக்களவையில் பிரியங்கா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நேற்றில் இருந்து பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து இன்று மக்களவையில் பிரியாங்கா காந்தி... மேலும் பார்க்க

ADMK : 'தென் மாவட்டங்களில் எடப்பாடி; தலைவலியாக 30 தொகுதிகள்!' - எப்படி பிரசாரம் செய்யப்போகிறார்?

'எடப்பாடி சுற்றுப்பயணம்!''மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்...' என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். இதுவரை 49 தொகுதிகளில் பிரசாரத்தை முடித்த... மேலும் பார்க்க

புதுச்சேரி: `10,000 மாணவர்கள் பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டனர்!' - அதிர்ச்சி கொடுக்கும் மத்திய அரசு

முழு வீச்சில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்திய புதுச்சேரி கல்வித்துறைபுதுச்சேரியில் கடந்த 2021-ல் பா.ஜ.க - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் அனைத்தும... மேலும் பார்க்க

ADMK: `கூட்டணியில் சசிகலா, டிடிவி தினகரன் வந்தால் அதிமுக நிலைப்பாடு?' - எடப்பாடி சொன்ன பதில்

2026 தேர்தலையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் இன்று (ஜூலை 29) சிவகங்கை மாவட்டத்தில் பிரசாரம் மேற... மேலும் பார்க்க

Kanimozhi: `தமிழன் கங்கையை வெல்வான்’ - மக்களவையில் அமித் ஷா முன் கர்ஜித்த கனிமொழி

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்ற மக்களவையில் இன்று உரையாற்றினார்.தனது உரையில் அமித் ஷா, "இன்று, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இ... மேலும் பார்க்க