செய்திகள் :

3 நாள் சரிவுக்குப் பிறகு மீண்ட பங்குச் சந்தை; சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வு!

post image

மும்பை: ப்ளூ-சிப் பங்குகளான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் ஏற்றத்தால், மூன்று நாள் சரிவு முடிவடைந்து பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மீண்டன.

இன்றைய காலை நேர வர்த்தகம் சரிவில் தொடங்கி நிலையில், மத்திய நேர வர்த்தகத்தில் அணைத்து இழப்புகளை மீட்டெடுத்து நாளின் உச்சத்தை நெருங்கியது.

30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ குறியீடான சென்செக்ஸ் 446.93 புள்ளிகள் உயர்ந்து 81,337.95 புள்ளிகளாகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 140.20 புள்ளிகள் உயர்ந்து 24,821.10 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.21 சதவிகிதம் உயர்ந்த நிலையில் லார்சன் & டூப்ரோ, ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், மாருதி, பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்த நிலையில் ஆக்சிஸ் வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டைட்டன் மற்றும் ஐடிசி ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தன.

நிஃப்டி-யில் ஜியோ பைனான்சியல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எல் & டி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஐஷர் மோட்டார்ஸ் ஆகியவை உயரந்த நிலையில் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், டிசிஎஸ், ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி லைஃப், டைட்டன் ஆகிய பங்குகள் சரிவுடன் முடிவடைந்தன.

தீபக் ஃபெர்டிலைசர்ஸ் பங்குகள் 5 சதவிகிதம் உயர்ந்த நிலையில், ரூ.2,957 கோடி மதிப்புள்ள ஆர்டர் பெற்றதையடுத்து பிஎன்சி இன்ஃப்ராடெக் பங்குகள் 6% உயர்ந்தன.

நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் உயர்ந்ததையடுத்து இண்டஸ்இண்ட் வங்கி பங்குகள் 1% உயர்ந்து முடிந்தன.

ஹிண்ட் ரெக்டிஃபையர்ஸ் நிறுவனத்தின் ஜூன் வரையான காலாண்டு நிகர லாபம் 81.4% உயர்ந்து ரூ.12.7 கோடியாக இருந்ததையடுத்து அதன் பங்குகள் 20 சதவிகிதம் உயர்ந்தன.

லாப வளர்ச்சி சீராக இருந்தபோதிலும் வோல்டாம்ப் டிரான்ஸ்ஃபார்மர்ஸின் பங்குகள் 7 சதவிகிதம் உயர்ந்தன.

நிதியாண்டின் முதல் காலாண்டு லாபம் 79% குறைந்து ரூ.103 கோடியாக இருந்ததால் ஜூபிலன்ட் பார்மோவா பங்குகள் ஒரு சதவிகிதம் சரிவு.

கேட்வே டிஸ்ட்ரிபார்க்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் 24% உயர்ந்ததையடுத்து நிறுவனத்தின் பங்குகள் 7 சதவிகிதம் உயர்ந்தன.

டோரண்ட் பார்மாசூட்டிகல்ஸ் முதல் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த லாபம் 20% அதிகரித்ததால், நிறுவனத்தின் பங்குகள் 4 சதவிகிதம் உயர்ந்தன.

போஷ், டோரண்ட் பார்மா, ஷியாம் மெட்டாலிக்ஸ், ஈஐடி பாரி, லாரஸ் லேப்ஸ், எச்டிஎஃப்சி ஏஎம்சி உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தை எட்டியது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இன்று ரூ.6,082.47 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

ஆசிய சந்தைகளில் ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் சரிவுடன் முடிவடைந்தன. அதே நேரத்தில் தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு உயர்ந்து முடிவடைந்தன.

ஐரோப்பாவில் சந்தைகள் உயர்ந்து வர்த்தகமான நிலையில், அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) கலவையான குறிப்பில் முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.63 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 70.48 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

இதையும் படிக்க: 12,000 ஊழியர்கள் பணிநீக்கம்: டிசிஎஸ்

Markets rebound after 3-day decline.

பவர் கிரிட் முதல் காலாண்டு லாபம் 2.5% சரிவு!

புதுதில்லி: அதிக செலவுகள் காரணமாக, 2025-26 ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2.5 சதவிகிதம் குறைந்து ரூ.3,630.58 கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது அரசுக்கு சொந்தமான பவர் கிரிட் கார்ப்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் குறைந்து ரூ.87.43 ஆக நிறைவு!

மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவை முதலீட்டாளர்களின் உணர்வுகளை வெகுவாக பாதித்ததால் இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிக... மேலும் பார்க்க

எல் & டி பங்குகளை கொள்முதல் தொடர்ந்து, சென்செக்ஸ் 144 புள்ளிகள் உயர்வு!

மும்பை: உள்கட்டமைப்பு நிறுவனமான லார்சன் & டூப்ரோவின் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் கொள்முதல் செய்ததையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ... மேலும் பார்க்க

விரைவில் டாக்ஸி பயன்பாட்டுக்கு அறிமுகமாகும் கியா கேரன்ஸ் இவி!

கியா நிறுவனம் வணிக பயன்பாட்டுக்கான தனது முதல் இவி காரை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.கியா நிறுவனம் ஏற்கெனவே அறிமுகம் செய்து பெரும் வரவேற்பை பெற்று வரும் கேரன்ஸ் இவி மாடல் போன்ற காரைதான் வணிக பயன்பாட்... மேலும் பார்க்க

ரூ. 2,800 இருந்தால் போதும்..! ஏஐ பிளஸ் நோவா 5ஜி ஸ்மார்ட்போன்!

குறைந்த விலைக்கு ஏஐ பிளஸ் நிறுவனத்தின் நோவா மாடல் 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்தியாவின் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் ஏஐ பிளஸ் நிறுவனம், தற்போது அதிதிறன் கொண்ட ... மேலும் பார்க்க

ரூ.6 லட்சம் இருந்தால் போதுமா.?! நவீன வசதியுடன் ரெனால்ட் டிரைபர் பேஸ்லிஃப்ட்!

ரெனால்ட் நிறுவனத்தின் 7 இருக்கைகளுடன் எம்.பி.வி. காரான டிரைபர் சில மாற்றங்களுடன் பேஸ்லிஃப்ட்டாக அறிமுகமாகியுள்ளது. தற்போதைய மாடலுடன் ஒப்பிடுகையில் இந்த காரில் 30-க்கும் மேற்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்ட... மேலும் பார்க்க