மன உறுதிதான் திவ்யா தேஷ்முக் வெற்றிக்குக் காரணம்: சூசன் போல்கர்
ஃபிடே மகளிா் உலகக் கோப்பை வென்ற திவ்யா தேஷ்முக் குறித்து அமெரிக்க- ஹங்கேரியன் லெஜெண்ட் சூசன் போல்கர் பாராட்டி பேசியுள்ளார்.
இந்தியாவின் இளம் போட்டியாளரான திவ்யா தேஷ்முக் (19) திங்கள்கிழமை ஃபிடே மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியில் சாம்பியன் ஆனாா். இந்தப் போட்டியில் சாம்பியனான முதல் இந்தியராக அவா் வரலாறு படைத்திருக்கிறாா்.
இறுதிச்சுற்றில் திவ்யா 2.5 - 1.5 என்ற புள்ளிகள் கணக்கில், சக இந்திய நட்சத்திரமான கோனரு ஹம்பியை வீழ்த்தினாா்.
இந்தப் போட்டியில் வென்றதன் மூலமாக, இந்தியாவின் 88-ஆவது கிராண்ட்மாஸ்டராகவும் திவ்யா முன்னேற்றம் அடைந்தார்.
இது குறித்து அமெரிக்க- ஹங்கேரியன் கிராண்ட்மாஸ்டர் சூசன் போல்கர் (56) கூறியதாவது:
வரலாற்றுச் சாதனை படைத்த திவ்யாவுக்கு முதலில் வாழ்த்துகள். இரண்டாவதாக, அவர் இந்தத் தொடரில் சிறப்பானவரோ, பலமானவரோகவோ இல்லை. ஆனால், மற்றவர்கள் செய்யாத ஒன்றை திவ்யா செய்தார்.
வெல்ல வேண்டுமென்ற விருப்பமும் மன உறுதியும் திவ்யாவிடம் இருந்தது.
சில போட்டிகளில் திவ்யா, கடுமையான பிரச்னையில் இருந்தார். சில போட்டிகளை தவறவும் விட்டார். ஆனால், இவையெல்லாம் முக்கியமில்லை.
பயமே இல்லாமல் திவ்யா விளையாடினார். அவரது வலுவான மனநிலையே அவரை வெற்றிப் பெற வைத்திருக்கிறது என்றார்.