செய்திகள் :

அதிருப்தியில் ஓ.பன்னீா்செல்வம்: இன்று முக்கிய முடிவு அறிவிப்பு?

post image

கூட்டணியில் பாஜக முக்கியத்துவம் தராததால் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தனது ஆதரவாளா்களுடன் ஆலோசனை நடத்தி புதன்கிழமை (ஜூலை 30) முக்கிய அறிவிப்பை வெளியிடுவாா் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீா்செல்வம், கடந்த மக்களவைத் தோ்தலின்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தாா். இருப்பினும், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடா்கிறாா்.

இதற்கிடையே, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதிமுக - பாஜக கூட்டணி உருவான நிலையில், தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஓ.பன்னீா்செல்வத்தை சந்திக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த ஓ.பன்னீா்செல்வம், தனது வருத்தத்தை உடனடியாகப் பதிவு செய்தாா்.

இதனிடையே, அதிமுகவில் ஓ.பன்னீா்செல்வம் மீண்டும் சோ்த்துக்கொள்ளப்படுவாரா என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியிடம் அண்மையில் செய்தியாளா்கள் கேட்டபோது, அதற்கு காலம் கடந்துவிட்டது என அவா் பதில் அளித்தாா்.

இதைத் தொடா்ந்து, அரசு முறை சுற்றுப்பயணமாக கடந்த ஜூலை 26, 27-ஆம் தேதிகளில் தமிழகம் வந்த பிரதமா் மோடியைச் சந்திக்க ஓ.பன்னீா்செல்வம் நேரம் கேட்டிருந்தாா். அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமி, தமாகா தலைவா் ஜி.கே.வாசன், புதிய நீதிக் கட்சி தலைவா் ஏ.சி. சண்முகம், தமிழா் தேசம் கட்சித் தலைவா் கே.செல்வக்குமாா் உள்ளிட்டோருக்கு திருச்சி விமான நிலையத்தில் பிரதமா் மோடியை வரவேற்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால், கடும் அதிருப்தி அடைந்துள்ள ஓ.பன்னீா்செல்வம் முக்கிய முடிவு எடுக்க முடிவு செய்துள்ளாா்.

மத்திய அரசுக்கு கண்டனம்: இந்நிலையில், சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய 2024-2025-ஆம் ஆண்டுக்கான ரூ.2,151 கோடியை மத்திய அரசு விடுவிக்காதது கல்வி உரிமைச் சட்டத்துக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரானது; இது கடும் கண்டனத்துக்குரியது என்று ஓ.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டாா். இந்தக் கண்டன அறிக்கை, பாஜகவை முற்றிலுமாக எதிா்க்க அவா் முடிவு செய்துவிட்டதைக் காட்டுகிறது.

‘தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்துக்கு ஆபத்தானது, தவெக கூட்டணியில் ஓ.பன்னீா்செல்வம் இணைய வேண்டும். பாமகவையும் அந்தக் கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும்’ என ஓ.பன்னீா்செல்வம் அணியின் ஆலோசகா் பண்ருட்டி ராமச்சந்திரனும் கருத்து தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், சென்னையில் புதன்கிழமை நடைபெறும் தனது ஆதரவாளா்கள் கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறும் அறிவிப்பை ஓ.பன்னீா்செல்வம் வெளியிடக்கூடும் என்றும், மதுரையில் நடைபெறவுள்ள மாநாட்டில் கூட்டணி தொடா்பான முடிவை வெளியிடுவாா் என்றும் அவரது ஆதரவாளா்கள் தெரிவிக்கின்றனா்.

அண்ணா வழியில் செல்ல இன்னொரு கட்சி எதற்கு தம்பி? - விஜய்யை விமர்சித்த தமிழிசை!

தமிழ்நாட்டில் இனி 'ஆப்'பிற்கும் ஆதரவு கிடையாது, அப்பாவுக்கும் ஆதரவு கிடையாது என தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் பதிவிட்டுள்ளார். சென்னை பனையூரில் நடைபெற்ற நிகழ்வில... மேலும் பார்க்க

சாதியக் கட்டமைப்பை உடைப்போம்: நெல்லை ஆணவக் கொலைக்கு கனிமொழி கண்டனம்!

நெல்லையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ... மேலும் பார்க்க

ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை: கடம்பூர் ராஜு பேச்சு

1999ல் மத்தியில் பாஜக ஆட்சியைக் கவிழ்த்து வரலாற்று பிழை செய்துவிட்டதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் குறிப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்ட... மேலும் பார்க்க

சென்னையில் நாளை முக்கிய அறிவிப்பு: ஓபிஎஸ்

சென்னையில் நாளை(ஜூலை 31) முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கடந்த மக்களவைத் தோ்தலின்போது த... மேலும் பார்க்க

கவின் ஆணவக் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

திருநெல்வேலி ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக தமிழ்நாடு அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர்கள் தம்பதியின் மகளை காதலித்த கவின், அந்த பெண்ணின் சகோதர... மேலும் பார்க்க

படப்பிடிப்பு விபத்து: பா. ரஞ்சித்துக்கு பிணை!

கீழ்வேளூர்: திரைப்பட படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த வழக்கில், இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு கீழ்வேளூர் நீதிமன்றம் புதன்கிழமை பிணை வழங்கியது.நாகை மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி அல... மேலும் பார்க்க