Tsunami In Russia - அலறிய 15 Pacific Ocean நாடுகள்| நடந்தது என்ன?| Decode
இந்த வார இறுதியில் நிறைவடையும் பிரபல தொடர்!
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பவித்ரா தொடர் இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளது.
சினிமாவில் யோகி படத்தின் மூலம் நடிப்புப் பயணத்தை தொடங்கிய சினேகன், பவித்ரா தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக பிக் பாஸ் பிரபலம் அனிதா சம்பத் நடித்திருந்தார்.
மேலும் இந்தத் தொடரின் பிரதான பாத்திரங்களில் நடிகை கீதா, நவீன், தியா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். கடந்தாண்டு நவம்பர் 4 ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்ட பவித்ரா தொடர், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் பவித்ரா தொடர் இந்த வார இறுதியில் ஆக. 2 ஆம் தேதி நிறைவடையவுள்ளது. இதுவரை 227 எபிசோடுகளே ஒளிபரப்பாகியுள்ள இத்தொடர் குறுகிய காலத்தில் நிறைவடையவுள்ளது, இந்தத் தொடரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தொடரின் இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. சுவாரசியமான காட்சிகளுடன் சனிக்கிழமை நிறைவடைவுள்ள பவித்ரா தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகளைக் காண ரசிகர்கள் ஆர்வமாகவுள்ளனர்.
இந்தத் தொடருக்கு மாற்றாக ஒளிபரப்பப்படும் புதிய தொடரின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: பாக்கியலட்சுமி தொடர் நிறைவு: முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!