டிஸ்சார்ஜ்-க்கு பின் தலைமைச் செயலகம் செல்லும் ஸ்டாலின்! - ஓ.பி.எஸ்ஸுடன் `திடீர்’ சந்திப்பு
முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் இன்று சந்தித்துக் கொண்டுள்ளனர்.
கடந்த வாரம் சிகிச்சையில் இருந்த முதல்வர் ஸ்டாலின் தற்போது உடல்நிலை தேறி, வீடு திரும்பி உள்ளார். இன்று அவர் தலைமை செயலகத்திற்குச் செல்ல உள்ளார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின்னர், அவர் இன்று தான் தலைமை செயலகம் செல்கிறார்.
அவர் காலையில் வழக்கம்போல, வாக்கிங் சென்றுள்ளார். அதே அடையார் பார்க்கிற்கு ஓ.பி.எஸ்ஸும் வாக்கிங் வந்துள்ளார்.
இருவரும் சந்தித்துக்கொண்டப் போது, நலம் விசாரித்துக்கொண்டுள்ளனர்.

அடுத்த ஆண்டு தேர்தல், கூட்டணி பேச்சுவார்த்தை, பிரசாரம்... என தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும்போது, இந்தச் சந்திப்பு கவனிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓ.பி.எஸை நிச்சயம் அதிமுகவிற்குள் சேர்க்கமாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்... பாஜகவும் கையை விரித்துவிட்டது.
இந்த நிலையில், இன்று அவர் முக்கிய அறிவிப்பை வெளியிடபோகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.