செய்திகள் :

``காங்கிரஸ் தான் தீவிரவாதத்திற்கு காரணம்; அப்சல் குருவை ஏன் தூக்கிலிடவில்லை?'' - அமித்ஷா கேள்வி

post image

நேற்று மாநிலங்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது,

பாகிஸ்தானை இந்தியா எப்படி வழிக்கு கொண்டு வந்தது?

"நாம் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மற்றும் அதன் தளவாடங்கள் மீது தான் தாக்குதல் நடத்தினோம். ஆனால், அவர்கள் அவர்களது நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதாக நினைத்துக்கொண்டார்கள்.

பஹல்காம் தாக்குதல்
பஹல்காம் தாக்குதல்

அதனால், அதற்காக, அவர்கள் மே 8-ம் தேதி, நமது மக்கள் வசிப்பிடத்திலும், ராணுவ தளவாடங்கள் மீதும் தாக்குதல் நடத்தினார்கள்.

இதற்கு பதிலடியாக, மே 9-ம் தேதி, இந்தியா அவர்களது 11 ராணுவ தளவாடங்களையும், விமானத் தளங்களை அழித்தோம்.

இதன்பிறகு, பாகிஸ்தான் நம்மை தாக்கும் நிலையில் இல்லை.

சிதம்பரத்திற்கு கண்டனம்

சிதம்பரம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து கேள்வி எழுப்பி என்னை ராஜினாமா செய்ய சொல்கிறார்கள்.

அவர் மீண்டும், மீண்டும் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகளா என்று கேட்கிறார்.

பா. சிதம்பரம்
பா. சிதம்பரம்

நான் இன்று அவரிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். அவர் யாரைக் காப்பாற்ற நினைக்கிறார்? பாகிஸ்தானையா, லஷ்கர்-இ-தொய்பாவையா அல்லது தீவிரவாதிகளையேவா?

இதை சொல்ல அவருக்கு வெக்கமாக இல்லையா? ஆண்டவன் புண்ணியத்தில், அவர் கேள்வி கேட்ட அன்றே, மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மோடிக்கு நன்றி!

ஆரம்பத்தில், நாம் இந்த மாதிரியான தீவிரவாதத் தாக்குதலுக்கு ஆவணங்களைத் தான் அனுப்பி கொண்டிருந்தோம். ஆனால், தற்போது விமான மற்றும் சர்ஜிக்கல் தாக்குதல் மோடி பாகிஸ்தானுக்கு பதிலடியை தந்திருக்கிறார். அவர் பயத்தை உருவாக்கி இருக்கிறார்.

மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு நன்றி. அவர் என்ன சொன்னாரோ, அது இப்போது நடந்திருக்கிறது. இன்று தீவிரவாதிகள் முகாம்கள், தீவிரவாதிகளின் தலைமையகம் ஆகியவை தூசியாக்கப்பட்டுள்ளது. நமது ராணுவப் படை அதன் தலைவர்களை அழித்துள்ளது.

அமித்ஷா - மோடி

காங்கிரஸ் மீது சாடல்

தீவிரவாதம் குறித்து கேள்வி கேட்க காங்கிரஸிற்கு எந்த உரிமையும் இல்லை. காங்கிரஸின் வாக்கு வங்கி, சமாதான அரசியலால் தான் இன்று நாடு முழுவதும் தீவிரவாதம் பரவி உள்ளது.

பிரதமரை ராஜ்ய சபாவிற்கு வர சொல்கிறவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன். நான் உங்களுக்கு பதில் சொல்கிறேன்.

பிரதமர் மோடி அலுவல் பணிகளில் இருக்கிறார். என்னால் உங்களுக்கு பதிலளிக்க முடியும்போது, ஏன் அவரைக் கேட்கிறீர்கள்.

போர்நிறுத்தம்...

யார் போர்நிறுத்தத்தை கேட்டார்கள் என்று எதிர்க்கட்சிகள் கேட்கிறார்கள். அது யாருடைய கோரிக்கையின் பேரிலும் நடக்கவில்லை.

நாம் பாகிஸ்தானை அடிப்பணிய வைத்தோம். அவர்கள் தான் நமது ராணுவ இயக்குநர் ஜெனரலுக்கு போன் செய்து, தாக்குதலை நிறுத்த கேட்டுக்கொண்டார்கள்.

ஆரம்பத்தில் இருந்தே, போரோ, பாகிஸ்தானைத் தாக்குவதோ எங்களுக்கு எண்ணம் இல்லை.

'பாகிஸ்தானுக்கு தாக்குதலை நிறுத்த வேண்டுமானால், உடனடியாக நிறுத்திவிடுவோம்' என்று பிரதமர் மோடி உடனடியாக தெரிவித்துவிட்டார்.

சிதம்பரம்..

ஆபரேஷன் சிந்தூர் தீர்க்கமானது இல்லை என்று சிதம்பரம் கூறுகிறார். அவர் இங்கு இல்லையென்றாலும், அவருக்கு பதிலளிக்க விரும்புகிறேன்.

1965 மற்றும் 1971 போர் தீர்க்கமானதா? அது உண்மையென்றால், ஏன் இன்னும் நாட்டில் தீவிரவாதம் இருக்கிறது.

எதிரிகள் பயப்படவோ அல்லது திருந்தவோ செய்யும் வரை, தீர்க்கமான முடிவு என்பது இருக்காது.

இத்தனை ஆண்டுகளாக, அவர்களைப் பயமுறுத்துவதுப்போல எதுவும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்புறம் ஏன் அவர்கள் பயப்படுவார்கள்.

எந்தவொரு இந்துவும் தீவிரவாதிகள் ஆகமாட்டார்கள் என்பதைப் பெருமையுடன் சொல்கிறேன்.

சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தப் போது அப்சல் குரு தூக்கிலிடப்படவில்லை.

யார் இந்து தீவிரவாதம் குறித்து பேசுவது?

அப்சல் குரு
அப்சல் குரு

மதம்

மதத்தை வைத்து பெயர் வைப்பதை விட, இந்த அரசு ஒன்றும் செய்துவிட வில்லை என்று பிருத்விராஜ் சவான் கூறுகிறார்.

ஆனால், காங்கிரஸிற்கு, 'ஹர் ஹர் மஹாதேவ்' என்பது வெறும் மதம் ஸ்லோகம் அல்ல என்பது காங்கிரஸிற்கு புரியவில்லை.

அவர்கள் அனைத்தையும் இந்து - முஸ்லீம் என்றே பார்க்கிறார்கள்.

இன்றும்

இன்றும் பாகிஸ்தான் ஒரு சில தீவிரவாதத் தாக்குதலை இங்கு நடத்துகிறது என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அதன் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மோடியின் அரசு தீவிரவாத எதிர்ப்பிலும், தீவிரவாத ஊடுருவலை தடுப்பதிலும் தீர்க்கமாக இருக்கிறது" என்றார் அமித்ஷா.

US tariff: `ட்ரம்ப் விதித்த 25% வரி; இந்திய பங்குச்சந்தையில் ஏற்படும் தாக்கம்' - விளக்கும் நிபுணர்

'நினைவில் கொள்ளுங்கள்... இந்தியா நமது நண்பனாக இருக்கும்போது...' என்று தனது சமூக வலைதள போஸ்டை ஆரம்பித்து, இந்தியா மீது 25 சதவிகித வரியைப் போட்டு தீட்டியிருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இது இந்தியாவில... மேலும் பார்க்க

US tariff: இந்தியா மீது ட்ரம்ப் விதித்த 25% வரி; என்னென்ன துறைகள் பாதிக்கும்; எதற்கு பாதிப்பு இல்லை?

நேற்று இந்தியா மீது 25 சதவிகித வரி பிளஸ் ரஷ்யா உடன் வர்த்தகம் செய்வதற்கு அபராதம் விதித்துள்ளது அமெரிக்கா. இந்த வரி நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த வரி குறித்து இந்தியா என்ன சொல்கிறது? இந்த வரி குற... மேலும் பார்க்க

`சாதிவாரி கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு' -மனம் திறந்த ராகுல், காங்கிரஸ் செய்த தவறுகள் என்ன? | In Depth

கடந்த 26-ம் தேதி தெலங்கானாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் OBC மாநாடு நடந்தது. அதில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, ``என் 21 வருட அரசியல் வாழ்க்கையில் ஏழைகள், எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மையினர், பெண்கள... மேலும் பார்க்க

Doctor Vikatan: மலையேறும்போது மாரடைப்பு; யாருக்கு ரிஸ்க் அதிகம், தவிர்க்க முடியுமா?

Doctor Vikatan: பொழுதுபோக்காக டிரெக்கிங் செல்வோர், ஆன்மிகப் பயணங்களுக்காக மலைக்கோயில்களுக்குச் செல்வோர் பலர் இருக்கிறார்கள். இப்படிச் செல்வோரில் சிலர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த செய்திகளைஅடி... மேலும் பார்க்க

CM Stalin: சிகிச்சைக்குப் பிறகு தலைமைச் செயலகம் வரும் முதல்வர் ஸ்டாலின்; 3-ம் தேதி அடுத்தப் பயணம்?

தலைமை செயலகம் வரும் முதல்வர் ஸ்டாலின்:கடந்த 21-ம் தேதி காலை நடைபயிற்சியின் போது முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. ஆனாலும் அவர் அறிவாலயத்திற்கு வந்து கட்சி பணிகளை மேற்கொண்டார். அப்போத... மேலும் பார்க்க

``எடப்பாடி பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுத்து முதல்வர் ஆகவில்லை'' - அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல்களுக்காக மாணவர் சிறப்பு குறை தீர்வு முகாம் மற்றும் திண்டுக்கல் கல்வி அறக்கட்டளை மூலம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்ச... மேலும் பார்க்க