US tariff: இந்தியா மீது ட்ரம்ப் விதித்த 25% வரி; என்னென்ன துறைகள் பாதிக்கும்; எதற்கு பாதிப்பு இல்லை?
நேற்று இந்தியா மீது 25 சதவிகித வரி பிளஸ் ரஷ்யா உடன் வர்த்தகம் செய்வதற்கு அபராதம் விதித்துள்ளது அமெரிக்கா.
இந்த வரி நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.
இந்த வரி குறித்து இந்தியா என்ன சொல்கிறது?
இந்த வரி குறித்து இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், "இந்தியா, அமெரிக்கா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையை கவனமாக ஆய்வு செய்து வருகிறது.

நியாயமான மற்றும் சீரான வர்த்தகத்திற்கு பேச்சுவார்த்தையை இந்தியாவும், அமெரிக்காவும் கடந்த சில மாதங்களாக நடத்தி வந்தது. இதில் இந்தியா உறுதியாக உள்ளது.
மேலும், இந்திய அரசு அதன் நாட்டின் நலனை பாதுகாப்பதிலும், அதன் விவசாயிகள், சிறு, குறு, நடுத்தர பிசினஸ்கள், தொழிமுனைவோர்களின் நலனை காப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது.
அதனால், நாட்டின் நலனைக் காக்க என்ன செய்ய வேண்டுமோ, இங்கிலாந்து உடனான வர்த்தகத்திற்கு இந்தியா என்ன செய்ததோ, அதை மீண்டும் செய்யும்" என்று கூறியுள்ளது.
இந்த வரி விதிப்பின் மூலம் இந்தியாவின் என்னென்ன துறைகள் பாதிக்கப்படும், பாதிக்கப்படாது என்பதைப் பார்ப்போம்.
எந்தெந்த துறைகள் பாதிக்கப்படும்?
ஆட்டோமொபைல், ஆட்டோமொபைல் தயாரிப்பு பொருள்கள், ஸ்டீல், அலுமினியம், ஸ்மார்ட் போன்கள் அல்லது எலெக்ட்ரானிக்ஸ், சோலார் சம்பந்தப்பட்ட பொருள்கள், டெக்ஸ்டைக்ஸ், தோல் பொருள்கள், கடல் பொருள்கள், கற்கள் மற்றும் நகைகள், ஒரு சில உணவு மற்றும் விவசாயப் பொருள்கள் ஆகிய பொருள்கள் மீது 25 சதவிகிதவரி விதிக்கப்படும்.

விதிவிலக்கான துறைகள்
மருந்துப்பொருள்கள், செமி கண்டக்டர்கள், அரிய மற்றும் முக்கிய கனிமங்களுக்கு ஆகிய விலக்கப்பட்ட பொருள்கள் மீது எத்தனை சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது என்பது தற்போதைக்கு தெரியவில்லை. இந்தத் துறைகளிலும் இந்தியா மீது வரி விதிக்கப்பட்டால், இது இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவை தரும்.