உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!
முன்னாள் அதிமுக அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை எம்எல்ஏவான சி. விஜயபாஸ்கா், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தாா். அந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 35.79 கோடி மதிப்பில் சொத்து சோ்த்ததாக மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை சாா்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது விஜயபாஸ்கா் ஆஜராகவில்லை, அவா் தரப்பில் வழக்குரைஞா்கள் ஆஜராயினா். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 11-க்கு ஒத்திவைத்து நீதிபதி எல். ரகுபதி ராஜா உத்தரவிட்டாா்.