செய்திகள் :

`பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்தது வரலாற்றுப் புரட்சி’ - ஓ.பன்னீர்செல்வம் திடீர் அட்டாக்

post image

நேற்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 1999-ம் ஆண்டு பாஜக ஆட்சி கவிழ்த்தது குறித்து பேசியிருந்தார். அதாவது அது ஒரு வரலாற்று பிழை எனக் குறிப்பிட்டிருந்தார்,

இதற்கு எதிர்ப்புகளைத் தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

பெருமைக்குரியவர் மாண்புமிகு அம்மா

"புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கத்தை புரட்சித் தலைவரின் மறைவிற்குப் பின் நான்கு முறை, அதாவது இருபது ஆண்டு காலம் ஆட்சிக் கட்டிலில் அமைத்த பெருமைக்குரியவர் மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உயர்த்திய பெருமையும் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு உண்டு.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் “இரட்டை இலை” சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அமைத்த பெருமைக்குரியவர் மாண்புமிகு அம்மா அவர்கள்.

வரலாற்று பிழையா?

இப்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உச்ச நிலைக்கு அழைத்துச் சென்ற மாண்புமிகு அம்மா அவர்களை குறை சொல்லும் விதமாக “பாஜக கூட்டணி முறிவு" என்ற வரலாற்று பிழையை மாண்புமிகு அம்மா அவர்கள் செய்துவிட்டார்கள் என்று மாண்புமிகு அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட திரு. கடம்பூர் ராஜூ அவர்கள் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

1999 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் நலன் கருதி மாண்புமிகு அம்மா அவர்கள் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியிலிருந்து விலகியதால்தான், 2001 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மாண்புமிகு அம்மா அவர்கள் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார்கள். இந்த வரலாறு தெரியாமல் திரு. கடம்பூர் ராஜூ அவர்கள் பேசியிருப்பது அவரின் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

வரலாற்றுப் புரட்சி

மாண்புமிகு அம்மா அவர்கள் செய்தது வரலாற்றுப் பிழை அல்ல. அது ஒரு வரலாற்றுப் புரட்சி. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வழிவகுத்தது. ஆனால், மாண்புமிகு அம்மா அவர்களால் சட்டமன்ற உறுப்பினராக்கப்பட்ட, அமைச்சராக்கப்பட்ட திரு. கடம்பூர் ராஜு அவர்களின் பேச்சுதான் வரலாற்றுப் பிழை.

ஜெயலலிதா - வாஜ்பாய்
ஜெயலலிதா - வாஜ்பாய்

“மோடியா, இந்த லேடியா” பார்த்துவிடலாம் என்று சவால்விட்டு, 37 தொகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற காரணமாக இருந்த மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை திரு. கடம்பூர் ராஜூ அவர்கள் குறை சொல்வதைப் பார்க்கும்போது "வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது" என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது. மாண்புமிகு அம்மா அவர்களை குறை சொல்வது என்பது “உண்ட வீட்டுக்கு இரண்டகம்" செய்வதைப் போன்றது.

“ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது" மிகப் பெரிய துரோகம் என்பதை உணர்ந்து, தான் செய்த செயலுக்கு திரு. கடம்பூர் ராஜூ அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், இதற்குத் தக்க பாடத்தினை தமிழக மக்கள் புகட்டுவார்கள்.” என்றிருக்கிறார்.

DMK கூட்டணி : மதிமுக -க்கு பதில் தேமுதிக - STALIN Plan?| TRUMP Tarrif MODI Imperfect Show 31.7.2025

* US Tariff: இந்தியா மீது 25% வரி விதித்த Trump; ரஷ்யாவிடம் எண்ணெய், ஆயுதம் வாங்குவதால் அபராதம்!* Trump Tariffs: நண்பன் இந்தியாவுக்கு 25% வரி - ட்ரம்ப் அறிவிப்பால் என்னென்ன பாதிப்புகள் வரும்?* மத்திய ... மேலும் பார்க்க

'STALIN-OPS' புது கூட்டணி, பதற்றத்தில் BJP & EPS?! அரசியல் ட்விஸ்ட்! | Elangovan Explains

ஒரே நாளில் 'பிரேமலதா விஜயகாந்த் - மு.க ஸ்டாலின், ஓ.பி.எஸ்-மு.க ஸ்டாலின், கவின் குடும்பம்- கனிமொழி' என மூன்று முக்கிய சந்திப்புகள் நிகழ்ந்துள்ளது. மாலையில் மீண்டும், மு.க ஸ்டாலினை அவர் வீட்டிலேயே சந்தி... மேலும் பார்க்க

காலையில் வாக்கிங் சந்திப்பு; மாலையில் ஸ்டாலின் வீட்டுக்கே சென்ற ஓ.பி.எஸ் - அடுத்தடுத்த பரபரப்பு

முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் லேசான தலை சுற்றல் காரணமாக, அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியிருக்கும் நிலையில், இன்று காலையில் வழக்கம்போல வாக்கிங் சென்றார்.ஸ்... மேலும் பார்க்க

`படுத்துட்டு போத்தினா என்ன? போத்திட்டு படுத்தா என்ன? எல்லாம் ஒன்னுதான்’ - அன்வர் ராஜா எக்ஸ்க்ளூஸிவ்

``நீண்ட நெடிய காலமாக அதிமுக-வில் பயணித்து வந்தீர்கள். இப்பொழுது திமுக-வில் இணைகிறீர்கள். எப்படி இருக்கு திமுக?”``இனிமேதான் பாக்கணும். என்னைய பொறுத்த வரையிலும் நல்லாத்தான் இருக்கு. முதலமைச்சர் தளபதி என... மேலும் பார்க்க

பாலத்தீனத்தை அங்கீகரிக்கவிருக்கும் பிரிட்டன், பிரான்ஸ் - மத்திய கிழக்கு வரலாற்றில் திருப்புமுனையா?

முன்னாள் ஆசிரியர், பிபிசி உலக சேவை, லண்டன்கட்டுரையாளர்: மணிவண்ணன் திருமலைகடந்த சில நாள்களில் பாலத்தீன தனி நாடுக்கு, ஐரோப்பாவின் முக்கிய அரசுகளான பிரான்ஸும், பிரிட்டனும் அங்கீகாரம் அளிக்கப்போவதாக அறிவி... மேலும் பார்க்க