செய்திகள் :

உக்ரைன் ராணுவப் பயிற்சித் திடலில் பாய்ந்த ரஷிய ஏவுகணைகள்! 3 வீரர்கள் பலி!

post image

உக்ரைனின் ராணுவப் பயிற்சித் திடலின் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அந்நாட்டின் 3 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

உக்ரைனின் செர்னிஹிவ் பகுதியில் அமைந்திருந்த ராணுவப் பயிற்சி மையத்தின் திடலின் மீது ரஷியா நேற்று (ஜூலை 29), ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இதில், உக்ரைனின் 3 ராணுவ வீரர்கள் பலியானதுடன், 18 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ரஷியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறுகையில், செர்னிஹிவ் மாகாணத்தின், ஹொன்சாரிவ்ஸ்கே பகுதியில் அமைந்திருந்த உக்ரைனின் 169-வது ராணுவப் பயிற்சி மையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளது.

இந்தத் தாக்குதல்களில், இஸ்காந்தர் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதனால், சுமார் 200 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டிருக்கவோ அல்லது படுகாயமடைந்திருக்கவோ வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷியா மக்கள் குடியிருப்புகள் அதிகமுள்ள பகுதிகளின் மீது தனது தாக்குதல்களை அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

மேலும், 78 ராணுவ ட்ரோன்கள், 8 அதி நவீன போர் விமானங்கள் ஆகியவை மூலம் உக்ரைன் நகரங்களின் மீது, நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக, உக்ரைனின் விமானப் படை தகவல் வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: கூகுளின் ஏஐ சம்மரி: இணையதளங்களுக்கு சவால்! இனி என்னவாகும்?

Three Ukrainian soldiers have been killed in a Russian missile attack on a military training ground.

பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்! டிரம்ப்

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு ஏற்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.”இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தம் இப்போது வரை இறுதி செய்யப்படவில்லை. எனவே, இந்... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ விவாதத்தில் இந்திய தலைவா்கள் பேச்சு: பாகிஸ்தான் விமா்சனம்

ஆபரேஷன் சிந்தூரின்போது மக்களவையில் இந்திய தலைவா்கள் தெரிவித்த கருத்துகளை பாகிஸ்தான் விமா்சித்துள்ளது. அதேவேளையில், இந்தியாவுடன் அா்த்தமுள்ள பேச்சுவாா்த்தை நடத்துவதில் ஈடுபாடு கொண்டிருப்பதாகவும் அந்நாட... மேலும் பார்க்க

சிறுவா்கள் யு-டியூப் பயன்படுத்தத் தடை

சிறுவா்கள் பயன்படுத்தவதற்குத் தடை விதிக்கப்படவிருக்கும் சமூக ஊடகங்களில் விடியோ பகிா்வுத் தளமான யு-டியூபும் அடங்கும் என்று ஆஸ்திரேலிய அரசு புதன்கிழமை அறிவித்தது.சிறுவா்கள் சீரழிவதைத் தடுக்கும் வகையில் ... மேலும் பார்க்க

காஸா: பட்டினிச் சாவு 154-ஆக உயா்வு

காஸாவில் இஸ்ரேலின் முற்றுகை காரணமாக பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 154-ஆக உயா்ந்துள்ளது.இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையி... மேலும் பார்க்க

துரிதமாக பெண்ணின் உயிா்காத்த இந்திய தொழிலாளா்களுக்கு ரூ.43 லட்சம் நிதி: சிங்கப்பூா் மக்கள் திரட்டினா்

சிங்கப்பூரின் டான்ஜோங் கடோங் சாலையில் ஏற்பட்ட திடீா் பள்ளத்தில் விழுந்த காரில் சிக்கிய பெண்ணை துணிச்சலுடன் மீட்ட ஏழு இந்திய தொழிலாளா்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில், பொதுமக்களிடமிருந்து 70,000... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தம்: தாய்லாந்து - கம்போடியா மீண்டும் உறுதி

எல்லைப் பகுதிகளில் நடைபெற்று வந்த சண்டை நிறுத்தப்பட்டுள்ளதை தாய்லாந்தும் கம்போடியாவும் புதன்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தின. ஷாங்காய் நகரில் சீனா முன்னிலையில் சந்தித்த இரு நாட்டுப் பிரதிநிதிகளும் இதற்க... மேலும் பார்க்க