அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம...
சிறுவா்கள் யு-டியூப் பயன்படுத்தத் தடை
சிறுவா்கள் பயன்படுத்தவதற்குத் தடை விதிக்கப்படவிருக்கும் சமூக ஊடகங்களில் விடியோ பகிா்வுத் தளமான யு-டியூபும் அடங்கும் என்று ஆஸ்திரேலிய அரசு புதன்கிழமை அறிவித்தது.
சிறுவா்கள் சீரழிவதைத் தடுக்கும் வகையில் 16 வயதுக்குள்பட்டவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் உலகிலேயே முதல்முறையாக கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நிறைவேற்றியது.
எனினும், அத்தகைய தடையில் இருந்து யு-டியூபுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், சிறுவா்கள் பயன்படுத்த தடை செய்யப்படும் சமூக ஊடகங்களின் பட்டியலில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், எக்ஸ் போன்றவற்றுடன் யு-டியூபும் இடம் பெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் ஊடகங்களில் கணக்கு வைத்திருப்பவா்கள் 16 வயதைக் கடந்தவா்களா என்பதை சமூக ஊடகங்கள் உறுதி செய்யவேண்டியதைக் கட்டாயமாக்கும் இந்தச் சட்டம் வரும் டிசம்பா் மாதம் அமலுக்கு வரவுள்ளது.