Tsunami In Russia - அலறிய 15 Pacific Ocean நாடுகள்| நடந்தது என்ன?| Decode
Pooja Hegde: "கிள்ளிப் பார்த்துக்கட்டுமா?" - பூஜா ஹெக்டேவுடன் அரட்டை அடித்த கமலேஷ்
சிம்ரனுடன் 'டூரிஸ்ட் ஃபேமிலி' ஷூட்டிங் ஸ்பாட்டில் டான்ஸ் ஆடி அவருக்கே டஃப் கொடுத்த கமலேஷ் தற்போது பூஜா ஹெக்டேவுடன் அரட்டை, டான்ஸ் எனக் கலக்கியிருக்கிறார்.
கமலேஷிடம் பேசினோம்.
'''பீஸ்ட்' படம் பார்த்ததுல இருந்தே அவங்களை ஒரு தடவையாச்சும் நேரல மீட் பண்ண மாட்டோமானு நினைச்சிட்டிருந்தேன். ஏன்னா, என்ன காரணத்துக்குன்னே தெரியாம அவங்களை எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு.
அதனால எப்ப பார்ப்போம்னு இருந்த சூழல்லதான் இன்ப அதிர்ச்சியா அவங்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைச்சது.


அவங்களைப் பார்த்ததை என்னால நம்பவே முடியாததால அந்த நிமிசம் முதல்ல நான் அவங்ககிட்ட பேசின வார்த்தை, 'கொஞ்சம் கிள்ளிப் பார்த்துக்கட்டுமா'னு தான்.
பிறகென்ன, கொஞ்ச நேரம் ஜாலியா பேசிட்டிருந்தாங்க. 'டூரிஸ்ட் ஃபேமிலி' பத்தி ரொம்பவே பேசிப் பாராட்டிஙாங்க.
என்னுடைய 'மம்பட்டியான் டான்ஸ்' அவங்களூக்கு ரொம்பவே பிடிச்சிருந்திச்சாம்.
அப்படியே என்னுடைய அப்பா அம்மா, படிப்பு. அடுத்த படங்கள்னு எல்லாம் விசாரிச்சாங்க.
பதிலுக்கு நான் அவங்ககிட்ட என்ன பேசறது? அவங்களைப் பார்த்துட்டே இருந்தேன்'' என்றவர் கடைசியில் அவருடன் சேர்ந்தும் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு விட்டுத் திரும்பினாராம்.
டான்ஸில் சிம்ரன், பூஜா ரெண்டு பேர்ல யார் சூப்பர் எனக் கேட்டதும்,
'பார்த்தீங்களா மாட்டிவிடப் பாக்குறீங்களே, ஆனா நான் மாட்ட மாட்டேன்' என்றபடி பேச்சை முடித்துக் கொண்டார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...