3 ஆண்டுகளில்... வங்கிகளில் உரிமைகோரப்படாத வைப்புத்தொகை ரூ. 52,174 கோடி!
`விஜய்'ணா இல்லாமல் LCU இல்லை!’ - லோகேஷ் கனகராஜ் கொடுத்த LCU அப்டேட்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், அமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கூலி. அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளன.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 14-ம் தேதி கூலி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
தற்போது படக்குழு புரொமோஷன் பணியில் ஈடுபட்டுள்ளனர். லோகேஷ் கனகராஜ் தனது சொந்த ஊரான கோவையில் அவர் படித்த பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரிக்கு சென்றிருந்தார். அங்கு தனது வகுப்பறைக்கு சென்றும், ஆசிரியர்களிடம் உரையாடியும் மகிழ்ந்தார்.

இதுதொடர்பாக லோகேஷ் கனகராஜ் தன் சமூகவலைதள பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து லோகேஷ் கல்லூரி மாணவர்களுடன் உரையாற்றினார். அப்போது மாணவர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
“லியோ 2 வருமா”, “உங்களின் LCU-வில் விஜய் இருப்பாரா”, “அஜித் படம் எப்போது இயக்குவீர்கள்” உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு லோகேஷ், “லியோ 2 கதை ரெடி. விஜய் அண்ணா தான் பதில் சொல்ல வேண்டும். அவர் இல்லாமல் LCU இல்லை. ஆனால், அவர் LCU-வுக்கு வருவாரா இல்லையா என்று நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்.

அவரின் எண்ணம், முயற்சி எதை நோக்கி இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும். விஜய் அண்ணா இல்லாமல் LCU பூர்த்தியடையாது. எனக்கு அஜித் சாருடன் இணைந்து பணியாற்ற ஆசை உள்ளது. நேரம் வரும்போது நிச்சயம் பணியாற்றுவேன்.” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...