Wayanad: ஓராண்டல்ல, நூறாண்டைக் கடந்தாலும் ஆறாது இந்த ரணம் | வயநாடு நிலச்சரிவு
கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் விலகல்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து சந்திரகாந்த் பண்டித் விலகியுள்ளார்
கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு முன்பாக சந்திரகாந்த் பண்டித், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். சந்திரகாந்த் பண்டித்தின் முதல் சீசன் பதவிக் காலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 7-ஆம் இடம் பிடித்தது. அந்த சீசனில் காயம் காரணமாக கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் விளையாடவில்லை.
அடுத்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மீண்டெழுந்து சாம்பியன் பட்டம் வென்றது. அந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக கௌதம் கம்பீர் இணைந்தார். சந்திரகாந்த் பண்டித் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதோடு, ஐபிஎல் வரலாற்றில் அதன் சிறந்த நெட் ரன் ரேட்டைப் பதிவு செய்தது. அதிகபட்ச புள்ளிகளையும் பெற்றது.
இருப்பினும், நடப்பு ஐபிஎல் சீசன் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு சிறப்பானதாக அமையவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14 லீக் போட்டிகளில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், புள்ளிப்பட்டியலில் 8-ஆம் பிடித்தது மட்டுமின்றி, பிளே ஆஃப் கனவும் தகர்ந்தது. கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற அணி, இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்குக்கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது.
சந்திரகாந்த் பண்டித் விலகல்
நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறப்பாக செயல்படத் தவறிய நிலையில், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளரான சந்திரகாந்த் பண்டித் அவரது தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸின் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அந்த அணி பதிவிட்டிருப்பதாவது: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த சந்திரகாந்த் பண்டித், புதிய வாய்ப்புகளை நோக்கி நகர்வதாக முடிவு செய்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவர் தொடர்ந்து செயல்பட மாட்டார்.
We wish you the best for your future endeavours, Chandu Sir
— KolkataKnightRiders (@KKRiders) July 29, 2025
PS: Once a Knight, always a Knight. Kolkata will always be your home pic.twitter.com/GF0LxX5fIz
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர் வழங்கியுள்ள மதிப்புமிக்க பங்களிப்புகளுக்கு நாங்கள் எப்போதும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். அவருடைய தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வலுவான அணியாக உருவாக்கியதில் அவருடைய பங்களிப்பு இன்றியமையாதது. அவருடைய எதிர்கால பயணம் சிறக்க எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: டாம் லாதம் விலகல்; டெஸ்ட் அணியின் கேப்டனாக மிட்செல் சாண்ட்னர் நியமனம்!
Chandrakant Pandit has stepped down as the head coach of Kolkata Knight Riders.