வாக்குச்சாவடி அதிகாரிகளை அச்சுறுத்தும் மம்தா: தோ்தல் ஆணையத்தில் பாஜக முறையீடு
ஐசிசி தரவரிசை: ஸ்மிருதி மந்தனாவை முந்தி இங்கிலாந்து கேப்டன் முதலிடம்!
மகளிர் கிரிக்கெட் ஐசிசி தரவரிசையில் ந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவை முந்தி, இங்கிலாந்து கேப்டன் நாட் ஷிவர் பிரன்ட் முதலிடம் பிடித்துள்ளார்.
இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய இந்திய மகளிரணி டி20, ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்தது.
இந்தத் தொடரி இங்கிலாந்து அணி தோல்வியுற்றாலும் அதன் கேப்டன் நாட் ஷிவர் பிரன்ட் சிறப்பாக விளையாடினார்.
இந்தியாவுக்கு எதிரான இந்த மூன்று ஒருநாள் போட்டிகளில் முறையே அவர் 41, 21 98 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், மகளிருக்கான புதிய ஐசிசி தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூலை 29) வெளியானது.
இதில், 32 வயதாகும் இங்கிலாந்து கேப்டன் இரண்டு இடங்கள் முன்னேறி முதலிடம் பிடித்துள்ளார்.
Nat Sciver-Brunt following a strong showing at home pic.twitter.com/AlW5Ro2Y5Y
— ICC (@ICC) July 29, 2025
இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா ஓரிடம் பின்தங்கி இரண்டாம் இடம் பிடித்தார்.
மகளிர் ஒருநாள் ஐசிசி பேட்டர்கள் தரவரிசை
1. நாட் ஷிவர் பிரன்ட் - 731 புள்ளிகள்
2. ஸ்மிருதி மந்தனா - 728 புள்ளிகள்
3. லாரா வொல்வார்ட் - 725 புள்ளிகள்
4. எல்லீஸ் பெர்ரி - 684 புள்ளிகள்
5. அலீஸா ஹுலி - 679 புள்ளிகள்