`இந்தியாவின் மீது 20 - 25 சதவிகித பரஸ்பர வரியா?' - ட்ரம்பின் பதில் என்ன?
5-ஆவது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா? இல்லையா? - பயிற்சியாளர் பதில்
5-ஆவது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா? இல்லையா? என்பதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் பதில் அளித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்ய கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இந்த தொடர் தொடங்கும் முன்பே ஜஸ்பிரித் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இது குறித்து, இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் பேசும்போது, “பும்ரா தனக்கான உடல் உழைப்புக்கேற்ற அளவுக்கு உடல் திறனுடன் இருக்கிறார். அவர் கடைசி டெஸ்ட்டில் விளையாடுவாரா இல்லையா என்பது பின்னர் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 31 முதல் ஓவலில் தொடங்குகிறது.
5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து அணியும், சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணியும் ஐந்தாவது டெஸ்ட்டில் களமிறங்குகின்றன.